அ. பூ. பர்தன்

அர்தேந்து பூழ்சன் பர்தன் (Ardhendu Bhushan Bardhan) (மராத்தி: अर्धेन्दु भूषण वर्धन) (25 செப்டம்பர் 1924 – 2 ஜனவரி 2016)[1] அல்லது ஏ. பி. பர்தன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மேனாள் பொதுச் செயலாளர் ஆவார். பர்தன் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற உறுப்பினராக இந்திய விடுதலை இயக்கத்தில் கலந்துகொண்டார். பிரகு இவர் நாக்பூரில் இருந்து தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபடலானார். பின்னர் அனைத்திந்திய தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளரானார். இவர் 1957 இல் மகாராட்டிரா மாநிலச் சட்டமன்றத்துக்குத் தனிவேட்பாளராக நின்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பின் பல தேர்தல்களில் தோல்வியுற்அவே, தில்லியடைந்து 1990களில் தேசிய அரசியலில் ஈடுபடலானார். பின்னர் இந்திரஜித் குப்தா இந்திய உள்துறை அமைச்சராக பதவியேற்று இந்தியப் பொதுவுடைமக் கட்சிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியதும் அப்பதவிக்கு பர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

அர்தேந்து பூழ்சன் பர்தன்
பொதுச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
பதவியில்
1996–2012
முன்னவர் இந்திரஜித் குப்தா
பின்வந்தவர் சுரவாரம் சுதாகர ரெட்டி
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 25, 1924(1924-09-25)
பரிசால், வங மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றையவங்க தேசம்)
இறப்பு வார்ப்புரு:இறப்பும் அகவியும்
தில்லி, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
தொழில் அரசியலாளர், சமூகப் பணியாளர்

இளமை

பர்தன் பிரித்தானிய இந்தியாவில் இருந்த வங்க மாகாணம் (இன்றைய வங்காள தேசம்) சார்ந்த பர்சாலில் 1924 செப்டம்பர் 25 இல் பிறந்தார். இவர் 15 ஆம் அகவையிலேயே நாக்பூர் சென்றதும் பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டார்.[2] இவர் 1940 இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் சேர்ந்தார்.[2] அதே ஆண்டில் இவர் அப்போது தடைவிதிக்கப்பட்டிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். இவர் நாக்பூர் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார். கல்விகற்றவாறே இவர் மாணவர் இயக்கத்தை உருவாக்கி அணிதிரளச் செய்தார். இவர் 1945 இல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் செயலாளரானார். இவர் சட்ட்த்தில் இளவல் பட்டமும் பொருளியலில் முதுவர் பட்டமும் பெற்றார்.[2]

தொழிற்சங்க ஈடுபாடும் அரசியலும்

பர்தன் துகிலியல், மின்சாரம், தொடர்வண்டி, பாதுகாப்பு என பலதுறைத் தொழிலாளர்களோடு நெருங்கிப் பழகினார். இவர் பலமுறை நாக்பூரில் இருந்து தேர்தலில் நின்றுள்ளர். இவற்றில் ஒரேஒரு முறை மகாராட்டிரா சட்டமன்றத்துக்குத் 1957 இல் தனிவேட்பாளராகத் தேர்வு செயப்பட்டார்.[2][2] இவர் மகாராட்டிர மாநில மக்களை அணிதிரட்டி, அது 1960 மே 1 இல் உருவாக வழிவகுத்தார்.

பர்தன் தில்லி சென்று தேசிய் அரசியலில் ஈடுபடலானர்.[2] இவர் 1994 இல் அனைத்திந்திய தொழிஏசங்கத்தின் பொதுச் செயலாளரானார். மேலும் 1995 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் துணைச் செயலாளர் ஆனார்.

இந்திரஜித் குப்தா தேசிய முற்போக்குக் கூட்டணி அரசில் உள்துறை அமைச்சர் பதவியேற்றதும், பர்தன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரானார் இவர் இப்பதவியில் 1996 முதல் 2002 வரை இருந்தார்.[3] இவர் இலால் கிறிழ்சிண அத்வானியின் ’’இரத யாத்திரை’’யை எதிர்த்து நடத்திய பரப்புரைக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர்.[4][5][5] பர்தன் எப்போதும் சமய சார்பற்ற இந்தியாவையே போற்றினார்.[5]

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஆதரித்த, தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு உருவாக்கத்தில் பர்தன் முதன்மையான பாத்திரம் வகித்தார்.[2] அன்றைய இராஜத்தானின் ஆளுநராகவிருந்த பிரதீபா பட்டேலை இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வதில் முனைவோடு பாடுபட்டார்.[2]

இறப்பு

பர்தன் 2015 இல் பக்கவாத நோய் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இவர் 2016 ஜனவரி 2 இல் புது தில்லி, கோவிந்த வல்லப பந்த் மருத்துவ மனையில் இறந்தார்.[6][7][8]

இவர் இறப்புக்கு குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி,[9] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,[6][10] இந்திய தேசியப் பேராயக் கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட பலர் இரங்கல் பாராட்டினர்.[11]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.