அர்கீசொ
அர்கீசொ (சோமாலி: 'Hargeysa', அரபு மொழி: هرجيسا)[1][2] சோமாலிலாந்துவின் தலைநகராக உள்ளது. சோமாலிலாந்து தன்னைத்தானே குடியரசு நாடாக 1991 இல் அறிவித்துக் கொண்டப்பொழுதும் சர்வதேச அளவில் சோமாலியாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.[3]
அர்கீசொ ஹர்கெய்சா هرجيسا | |
---|---|
நகரம் | |
![]() | |
நாடு | ![]() |
பிராந்தியம் | ஊகுயி கல்பீத் |
மாவட்டம் | அர்கீசொ |
அரசு | |
• மேயர் | அப்துர்ரகுமான் மகமூத் ஐதீது |
பரப்பளவு | |
• நிலம் | 71 |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 1 |
• அடர்த்தி | 1,600 |
நேர வலயம் | EAT (ஒசநே+3) |
இடைக்காலத்தில் அர்கீசொ அடல் சுல்தானியகத்தின் அங்கமாக இருந்தது. 1941இல் பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த சோமாலிலாந்தின் தலைநகரானது. 1960இல் பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்ற சோமாலிலாந்து, இத்தாலிய ஆட்சியிலிருந்து விடுபட்ட சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு சூலை 1 அன்று சோமாலியக் குடியரசாக உருவானது.[4][5]
ஓகோ மலைத்தொடரின் பள்ளத்தாக்கு ஒன்றில் அர்கீசொ அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 1,334 m (4,377 ft) ஆகும். இங்கு புதிய கற்கால பாறை ஓவியங்களைக் காணலாம். அருமணி வெட்டுதல், கட்டுமானம், சில்லறை வர்த்தகம், ஏற்றுமதி/இறக்குமதி செயற்பாடுகளுக்கு வணிக மையமாக விளங்குகின்றது.[1]
சான்றுகள்
- )"Hargeisa". Jubba Airways. பார்த்த நாள் 18 July 2013.
- "Somalia: largest cities and towns and statistics of their population". world-gazetteer.com. பார்த்த நாள் October 19, 2012.
- Somaliland’s Quest for International Recognition and the HBM-SSC Factor
- Worldstatesmen – Somalia
- Encyclopædia Britannica, The New Encyclopædia Britannica, (Encyclopædia Britannica: 2002), p.835
வெளி இணைப்புகள்
- Hargeisa City Government web Site (Archive)
- Hargeisa, Somalia
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: அர்கீசொ