அருந்ததி (1943 திரைப்படம்)
அருந்ததி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். டாண்டனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்பா பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அருந்ததி | |
---|---|
![]() அருந்ததி பாட்டுப் புத்தக முகப்பு | |
இயக்கம் | எம். எல். டாண்டன் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் எம். எல். டாண்டன் |
வசனம் | டி. வி. சாரி |
இசை | எம். டி. பார்த்தசாரதி எஸ். ராஜேசுவரராவ் |
நடிப்பு | ஹொன்னப்பா பாகவதர் என். எஸ். கிருஷ்ணன் செருகளத்தூர் சாமா எஸ். டி. சுப்பையா யு. ஆர். ஜீவரத்னம் டி. ஏ. மதுரம் எம். ஆர். சந்தானலட்சுமி பி. எஸ். சிவபாக்கியம் |
பாடலாசிரியர் | பாபநாசம் சிவன், எஸ். வேல்சாமி கவி |
வெளியீடு | சூலை 2, 1943 |
நீளம் | 11000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
நடிகர் | பாத்திரம் |
---|---|
செருகளத்தூர் சாமா | வசிட்டர் |
ஒன்னப்ப பாகவதர் | அக்கினி |
எஸ். டி. சுப்பையா | நாரதர் |
கே. கே. பெருமாள் | வீரசாம்பான் |
என். எஸ். கிருஷ்ணன் | கண்ணன் |
காளி என். ரத்னம் | வள்ளுவன் |
டி. பி. பொன்னுசாமி பிள்ளை | மிராசுதார் |
கே. பி. காமாட்சி | மாப்பிள்ளை |
நடிகைகள்
நடிகை | பாத்திரம் |
---|---|
யு. ஆர். ஜீவரத்தினம் | அருந்ததி |
எம். ஆர். சந்தானலட்சுமி | சுவாகா |
டி. ஏ. மதுரம் | கண்ணம்மா |
பி. எஸ். சிவபாக்கியம் | வாசுகி |
எம். எம். ராதாபாய் | சண்டிகை |
ஜே. சுசீலா தேவி | அனுசூயா |
ஞானாம்பாள் | பார்வதி |
கே. கே. கிருஷ்ணவேணி | மாலிகா |
பாடல்கள்
இத்திரைப்படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன், எஸ். வேல்சாமி கவி ஆகியோர் எழுதியிருந்தனர். எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேசுவரராவ் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.[1]
பாடல் | பாத்திரம் | பாடியவர்கள் | இராகம் - தாளம் |
---|---|---|---|
சந்ததமும் உனைப் பணிவேன் | வசிட்டர் | செருகளத்தூர் சாமா | ஜெயமனோகரி - ஆதி |
உன் முடிமேல் சேற்றில் வந்த | அருந்ததி | யு. ஆர். ஜீவரத்னம் | இந்துத்தானி |
கோபுரத்துமேலே கொத்தமல்லி போலே | வாசுகி | பி. எஸ். சிவபாக்கியம் | - |
வயிறு பசித்து தின்னாலன்றோ | அருந்ததி | யு. ஆர். ஜீவரத்தினம் | தெம்மாங்கு |
மாய்கையினால் நீ உனையே மறந்தே | நாரதர் | எஸ். டி. சுப்பையா | தர்பார் - ஆதி |
கைலாச பதே கருணை புரிவாய் | நாரதர் | எஸ். டி. சுப்பையா | வாசஸ்பதி - ஆதி |
ஈன குலந்தனில் ஏன் பிறந்தேன் | அருந்ததி | யு. ஆர். ஜீவரத்தினம் | சிந்து பைரவி - ஆதி |
இறைவனைக் கண்டேன் அமுதுண்டேன் | அருந்ததி | யு. ஆர். ஜீவரத்தினம் | இந்துத்தானி |
ஜக மாயை பெரிதே | வசிட்டர் | செருகளத்தூர் சாமா | காப்பி - ரூபகம் |
யாரே இவ்வுலகினில் எனையறிவார் | வசிட்டர் | செருகளத்தூர் சாமா | சாவேரி - ஆதி |
என் மோகன சுகுமாரன் | சுவாகா | எம். ஆர். சந்தானலட்சுமி | - |
அம்பா நீ வரம் தரவேண்டுமே | சுவாகா | எம். ஆர். சந்தானலட்சுமி | கீரவாணி - ஆதி |
ஈதல்லவோ தெள்ளமுதம் | அக்கினி, ரிசிபத்தினிகள் | ஹொன்னப்ப பாகவதர் | இந்துத்தானி |
ஓ ஜகதீசா உன் திருவுள்ளம் | அருந்ததி | யு. ஆர். ஜீவரத்தினம் | ஹேமவதி - ஆதி |
அருந்ததி மகா புனிதவதி | நாரதர் | எஸ். டி. சுப்பையா | பிலகரி - ஆதி |
மூளையே இல்லாட்டா முன்னேற்றம் வந்திடுமோ | கண்ணன், கண்ணம்மா | என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் | - |
கட்டுக் கடங்காத ஆசை | கண்ணம்மா | டி. ஏ. மதுரம் | - |
மேற்கோள்கள்
- அருந்ததி பாட்டுப் புத்தகம். கூப்பர்ஸ் பிரின்டிங் வெர்க்ஸ், பெங்களூர். 1943.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.