அம்புலிமாமா

அம்புலிமாமா பரவலாக வாசிக்கப்படும் சிறுவர் இதழ் ஆகும். இது ஜூலை 1947 ஆம் ஆண்டு பி.நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தொடங்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றது. இந்திய தொன்மவியல் கதைகளை முதன்மையாக வைத்துப் பலநிறப் படங்களோடு சொல்வது அம்புலிமாமாவின் சிறப்பு. இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட 14 மொழிகளில் வெளிவருகின்றது. கண்பார்வையற்றவர்களுக்கான அம்புலிமாமா பதிப்பு 1998 வரை வந்தது.

அம்புலிமாமா
அம்புலிமாமா
இதழாசிரியர் பி. விசுவனாத ரெட்டி
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி மாதிகை
மொழி தெலுங்கு,தமிழ், ஆங்கிலம்,
இந்தி முதலானவை.
முதல் இதழ் ஜூலை 1947
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை 200,000 (14 மொழிகளில்)
வெளியீட்டு நிறுவனம் சாந்தமாமா இந்தியா
லிமிட்டட்
நாடு இந்தியா
வலைப்பக்கம் www.chandamama.org

அம்புலிமாமாவின் வரலாறு

அம்புலிமாமா ஜூலை 1947 ஆம் ஆண்டு பி.நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தமிழ்ப் பதிப்பு ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வெளிவந்தது. சிறுவர்களுக்கு நல் ஒழுக்கத்தையும் பண்புகளையும் ஊட்டுவதே அம்புலிமாமாவின் குறிக்கோள்[1]

தெலுங்கு மூலமும் தமிழ்ப் பதிப்பும்

தெலுங்கு பதிப்பே தமிழ் உட்பட பிற மொழிகளுக்கான மூலப் படைப்பு. இது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், வரைபடங்களில் தெளிவாக வெளிப்படுகின்றது. தமிழ்ப் பதிப்பில் சிறப்புப் படைப்புக்களாக "தமிழகத்து நாட்டுப்புறக்கதை" என்ற ஒரு கதைப்பகுதி அவ்வப்பொழுது வெளியிடப்படுவதுண்டு.

அம்புலிமாமாவின் சாதிய பிரதிபலிப்பு

இந்திய தொன்மவியல் கதைகளில் காணப்படும் சாதிய சமூக அதிகாரப் படிநிலைகளை அதன் கதைகளின் ஊடாகப் பிரதிபலித்து முன்னிறுத்தி நிலைநிறுத்த உதவுகின்றது என்ற குற்றச்சாட்டும் அம்புலிமாமா மீது உண்டு.

அம்புலிமாமாவும் டிசினி (Disney) கும்பனியும்

அம்புலிமாமாவின் பதிப்பகத்தின் ஒரு பகுதியை அமெரிக்க கும்பனியான டிஸ்னி (Disney) கொள்முதல் செய்யவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.