அமர்னா நிருபங்கள்
அமர்னா கடிதங்கள், என்பது புது எகிப்து இராச்சியாத்தின் ஆட்சியாளர்களுக்கும், பண்டைய அண்மை கிழக்கின் கானான் மற்றும் அனுர்ருவில் இருந்த சிற்றரசர்களுக்கும் இடையே நடந்த தொடர்பாடல்களின் தொகுப்பாகும்.[1]

இக்களிமண் பலகை கடிதங்கள் அமர்னா என்ற பண்டைய எகிப்து நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, இது கிமு.1369-1353 காலப்பகுதியில், புது எகிப்து இராச்சியத்தின் தலைநகராகும். எகிப்தியல் ஆய்வுகளுக்கு இக்கடிதங்கள் வழக்கமானதல்ல. ஏனெனில் இது ஆப்பெழுத்துகளில் அக்காத் மொழியில் எழுதப்பட்டமையாகும். தற்போது மொத்தம் 382 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடிதங்கள்
இக்கடிதங்கள் ஆப்பெழுத்து எழுத்துகளில் அக்காத் மொழியில் எழுதப்பட்டுள்ளது, இது அக்காலத்தின் அரசியல் மொழியாகும். முதன் முதலாக அப்பிரதேச எகிப்தியர்களால் 1887 அளவில் கண்டுப் பிடிக்கப்பட்டது. இவை இரகசியமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு தொல்பொருள் சந்தைகளில் விற்கப்பட்டது. வில்லியம் பிலிண்டெர்ச் பிட்ரி என்ற தொல்பொருள் ஆய்வாளரே இப்பகுதியில் ஆய்வுகளை நடத்திய முதல் ஆய்வாளராவார்,1891-92 காலப்பகுதியில் அவர் 21 பலகைகளை கண்டெடுத்தார். எமில் சேசியண்ட் என்ற ஆய்வாளர் 1903இல் மேலும் 24 பலகைகளை கண்டெடுத்தார். இன்று இவை எகிப்திலும் வேறு பல நாடுகளிலும் தொல்பொருள் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் அப்பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்ட பலகைகள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. 202 அல்லது 203 பேர்லினிலும், 4950 எகிப்திலும் 7 பிரான்சிலும்,3 மொஸ்கோவிலும் 1 அமெரிக்காவிலும் இருக்கின்றன.

பண்டைய எகிப்து |
அசூர் |
பபிலோனியா |
அசிரியா |
மித்தானி |
300 கடிதங்கள் அரசியர் தொடர்பாடல் கடிதங்களாகும் ஏனையவை கல்வி சார் கடிதங்களும் பிறவுமாகும். இவை பண்டைய எகிப்து அக்காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் பபிலோனியா, அசிரியா, மித்தானி இராச்சியம், சிரியா, பாலஸ்தீனம், சைப்பிரசு போன்ற நாடுகளுடனும் கானானில் இருந்த பிரதிநிதிகளோடு கொண்டிருந்த தொடர்புகளை நன்கு விளக்குகிறது. அக்காலப் பகுதியின் நிகழ்வுகளைக் காலவோட்டத்தின் படி ஒழுங்குப் படுத்த இவை முக்கியமாகும்.
கால ஓட்டம்
வில்லியம் எல்.மொரான் அமர்னா கடிதங்களின் உள்ளடக்கத்தை கொண்டு ஊகித்தறிந்த காலவோட்டத்தின் நிகழ்வுகள்:
நீண்ட ஆய்வுகளின் பிறகு இன்னமும் அமர்னா கடிதங்களில் உள்ள நிகழ்வுகளின் காலவோட்டம் பல சிக்கல்களை கொண்டுள்ளது. சில நிகழ்வுகளே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆதாரங்களின் படி முதாலாவது இக்களிமண் பலகை பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் ஆட்சி பீடமேறிய 30 வருடத்தவையாகும். இறுதி அமர்னா நிருபம் எழுதப்பட்டது துட்டன்காமுன் மன்னன் ஆட்சி பீடமேறிய முதலாவது வருடமாகும் என்பது பொதுவான கணிப்பாகும்.
உசாத்துணைகள்
- வில்லியம் எல்.மொரான், The Amarna Letters, Baltimore: Johns Hopkins University Press, 1992. ISBN 0-8018-4251-4
- Goren, Y., Finkelstein, I. & Na’aman, N., Inscribed in Clay - Provenance Study of the Amarna Tablets and Other Ancient Near Eastern Texts, Tel Aviv: Sonia and Marco Nadler Institute of Archaeology, Tel Aviv University, 2004. ISBN 965-266-020-5
வெளியிணைப்புகள்
- எல்-அமர்னா கலைக்களஞ்சியம் கடிதங்களின் சாராம்சங்கள்.
- களிமன் பலகைகள் மீதான கனிய மற்றும் இரசயனவியல் ஆராய்ச்சிகள்