அண்ண மெய்

அண்ண மெய் எனப்படுவது, நாக்கு மேலெழுந்து அதன் உடற்பகுதியால் வல்லண்ணத்தைத் (வாய்க்கூரையின் நடுப்பகுதி) தொடுவதன் மூலம் ஒலிக்கப்படும் மெய்யொலியாகும். நாக்கின் நுனிப்பகுதி வளைந்து அண்ணத்தைத் தொடும்போது உருவாகும் ஒலி வளைநா ஒலியாகும்.

பரவலாகக் காணப்படும் அண்ண மெய், மிகப் பொதுவான உயிர்ப்போலியாகிய j, ஆகும். இது உலகின் மொழிகளில் உள்ள அதிகம் காணப்படும் ஒலிகளில் முதற் பத்துக்குள் உள்ளது. மூக்கொலியான ɲ உம் பொதுவாகக் காணப்படும் ஒலியாகும். இது உலகின் 35 வீதமான மொழிகளில் காணப்படுகின்றது[1].

அனைத்துலக ஒலியெழுத்து முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள அண்ண மெய்கள் வருமாறு:

IPA விளக்கம் எடுத்துக்காட்டு
மொழி Orthography IPA பொருள்
அண்ண மூக்கொலி பிரெஞ்சு agneau [aɲo] ஆட்டுக்குட்டி
ஒலிப்பற்ற அண்ண வெடிப்பொலி ஹங்கேரியன் hattyú [] அன்னம்
ஒலிப்புடை அண்ண வெடிப்பொலி மார்கி ɟaɗí [ɟaɗí] எருதின் திமில்
ஒலிப்பற்ற அண்ண உரசொலி ஜெர்மன் nicht [çt] இல்லை
ஒலிப்புடை அண்ண உரசொலி ஸ்பானியம் yema [ʝema] முட்டை மஞ்சட் கரு
அண்ண உயிர்ப்போலி ஆங்கிலம் yes [jɛs] ஆம்
பக்க அண்ண உயிர்ப்போலி இத்தாலியன் gli [ʎi] the (ஆண்பால் பன்மை)
ஒலிப்புடை அண்ண உள்வாங்கொலி சுவாஹிலி hujambo [huʄambo] hello

குறிப்புகள்

  1. Ian Maddieson (with a chapter contributed by Sandra Ferrari Disner); Patterns of sounds; Cambridge University Press, 1984. ISBN 0-521-26536-3
  மெய்கள் (பட்டியல், அட்டவணை) பார்க்கவும்: IPA, உயிர்கள்  
நுரையீரலொலிகள் ஈரிதழ் இத.பல். பல் ப.முக. பி.பல்முக. வளைநா அண்ணம் மே.அண். உள்நா. மிடறு கு.வளைமூ. கு.வளை நுரையீரல் ஒலிகளற்றவையும் பிற குறியீடுகளும்
மூக்கொலிகள் m ɱ n ɳ ɲ ŋ ɴ கிளிக்குகள்  ʘ ǀ ǃ ǂ ǁ
வெடிப்பொலி p b t d ʈ ɖ c ɟ k ɡ q ɢ ʡ ʔ வெடிப்பொலிகள்  ɓ ɗ ʄ ɠ ʛ
உரசொலிகள்  ɸ β e|f v θ ð s z ʃ ʒ ʂ ʐ ç ç|ʝ ç|x ɣ χ ʁ ħ ʕ ʜ ʢ h ɦ புறவுந்தொலிகள் 
உயிர்ப்போலிகள்  β̞ ʋ ð̞ ɹ ɻ j ɰ பிற பக்கவழி ஒலிகள்  ɺ ɫ
உருட்டொலிகள் ʙ r ʀ இணையொலிப்புகள் 
உயிர்ப்போலிகள்
ʍ w ɥ
வருடொலிகளும், ஒற்றொலிகளும் ѵ ɾ ɽ இணையொலிப்பு 
உரசொலிகள்
ɕ ʑ ɧ
பக். உரசொலிகள் ɬ ɮ வெடிப்புரசொலிகள்  ʦ ʣ ʧ ʤ
பக். உயிர்ப்போலிகள் l ɭ ʎ ʟ இணையொலிப்பு 
வெடிப்பொலிகள் 
k͡p ɡ͡b ŋ͡m
இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help]
இரட்டையாகக் குறியீடுகள் காணப்படும்போது வலது புறம் இருப்பவை ஒலிப்புடை மெய்யைக் குறிக்கும். நுரையீரல் ஒலிப்புச் சாத்தியப்படாது எனக் கண்ட பகுதிகள் நிறந் தீட்டப்பட்டுள்ளன.|}
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.