சுவாகிலி மொழி

சுவாகிலி மொழி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கிசுவாகிலி என்னும் மொழி ஒரு பாண்டு மொழியாகும். கீழ்-சகாரா ஆப்பிரிக்காவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழி இதுவாகும். இப் பகுதியின் 80 மில்லியன் மக்கள்தொகையில் சுவாகிலியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 5-10 மில்லியன் வரையே இருப்பினும், தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் முக்கியமான மொழியாக இது உள்ளது.

சுவாகிலி மொழி
நைகர்-கொங்கோ
  • அத்லாந்திக்-கொங்கோ
    • வோல்டா-கொங்கோ
      • பெனு-கொங்கோ
        • பாண்டோயிட்
          • தெற்கு
            • Narrow Bantu
              • மத்திய
                • G
                  • சுவாகிலி மொழி
அலுவலக நிலை
Regulated byBaraza la Kiswahili la Taifa (தான்ஸானியா)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sw
ISO 639-2swa
ISO 639-3Variously:
swa  சுவாகிலி (பொது)
swc  கொங்கோ சுவாகிலி
swh  சுவாகிலி (சிறப்பு)

சுவாகிலி, சுவாகிலி மக்களின் (அல்லது வாசுவாகிலி) தாய்மொழியாகும். இவர்கள் ஆபிரிக்காவின் இந்துமாக்கடல் கரையோரத்தில் தெற்குச் சோமாலியா தொடக்கம் மொசாம்பிக் - தான்சானியா எல்லைப்பகுதி வரையுள்ள பல பெரிய நிலப்பகுதிகளில் வாழ்கிறார்கள். கிழக்காப்பிரிக்காவின் பெரும்பகுதியினதும் கொங்கோ ஜனநாயகக் குடியரசினதும் முக்கிய மொழியாகிய இம் மொழியே ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அலுவல் மொழியாக உள்ள ஒரே ஆப்பிரிக்க மொழியாகும். சுவாகிலி உலகின் பல முன்னணிப் பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி), வாய்சு ஆஃப் அமெரிக்கா, சின்கூவா (Xinhua) போன்ற அனைத்துலக ஊடகங்களும் சுவாகிலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.