நைகர்-கொங்கோ மொழிகள்

மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகள் உலகின் மிகப்பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலவியல் பரம்பல், பேசுபவர்களின் எண்ணிக்கை (600 மில்லியன் மக்கள், அதாவது 85% ஆப்பிரிக்க மக்கள் தொகை), பேசப்படும் ஆப்பிரிக்க மொழிகளின் எண்ணிக்கை (1514) போன்றவற்றின் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மொழிக்குழுவாக நைகர்-கொங்கோ மொழிக்குழு இருக்கின்றது[1]

நைகர்-கொங்கோ
நைகர்-கோடோபானியன் (obsolete)
புவியியல்
பரம்பல்:
Sub-Saharan Africa
இன
வகைப்பாடு
:
உலகின் முதன்மையான மொழிக் குடும்பங்களில் ஒன்று; வேறு மொழிக் குடும்பங்களுடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இவை எதுவும் இன்னும் போதிய ஆதரவு பெறவில்லை.
துணைக்
குழுக்கள்:
கோர்டோபானியன்
அத்லாந்திக்-கொங்கோ
நைகர்-கொங்கோ மொழிகளின் பரவலைக் காட்டும் நிலப்படம்

ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க் என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் நைகர்-கொர்டோபானியன் என அழைத்தார். ஜோன் பெந்தோர்-சாமுவேல் என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். (கொர்டோபானியன் மொழிகள் ஐப் பார்க்கவும்)

நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள்.

உசாத்துணைகள்

  • Joseph H. Greenberg, The Languages of Africa. Indiana Univ. Press (1966).
  • Bernd Heine and Derek Nurse, African Languages - An Introduction. Cambridge Univ. press (2000)
  • John Bendor-Samuel, The Niger-Congo Languages — A classification and description of Africa's largest language family, University Press of America (1989).
  • Ethnologue: Niger-Congo Family Tree

மேற்கோள்கள்

  1. Irene Thompson. "Niger-Congo Language Family". Updated March 27, 2013 by Jon Phillips,. The Technology Development Group. பார்த்த நாள் செப்டம்பர் 20, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.