அணங்கு (உயிரியல்)
உயிரியலில் அணங்கு (Nymph) எனப்படுவது, படிப்படியாக உருமாற்றத்துக்கு உட்படும் சில முதுகெலும்பிகளில், கருமுட்டையில் தொடங்கி, பால் முதிர்ச்சி அடைந்து முதிர்நிலையை அடையும்வரை தோன்றும் பல இடை வளர்நிலைகளைக் குறிக்கும். முக்கியமாக முழுமையற்ற உருமாற்றத்துக்கு உட்படும் பூச்சிகளின் விருத்தியின்போது இந்த அணங்குப்பூச்சிகள் உருவாகும். இந்த அணங்குப்பூச்சிகள், முழுமையான உருமாற்றம் நிகழும் பூச்சிகளில் உருவாகும் வளர்நிலையான குடம்பிகளைப் போலன்றி, பால் முதிர்ச்சியடைந்து உருவாகும் முதிர்நிலைப் பூச்சிகளை உருவத்தில் ஒத்தவையாக இருக்கும். மேலும் இந்த அணங்குப்பூச்சிகளில் தோலுரித்தல் மூலம் கூட்டுப்புழு உருவாவதில்லை. இறுதி அணங்குப்பூச்சியில் இருந்து, இறுதியான தோலுரித்தல் நிகழ்வின் மூலம் பால் முதிர்ச்சியடைந்த முதிர்நிலை தோன்றும்.[1]

இலைத்தத்தி (அல்லது தத்துப்பூச்சி) (Eurymela fenestrata) யின் அணங்கு
மேற்கோள்கள்
- Truman, James (1999). The origins of insect metamorphosis. Washington: Macmillan Magazines Ltd.. பக். 447. http://74.125.155.132/scholar?q=cache:mvffjkbQMO0J:scholar.google.com/+does+the+nymph+moult+into+an+adult+insect&hl=en&as_sdt=0,11.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.