அடைநெடுங் கல்வியார்

அடைநெடுங் கல்வியார் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவர்.

பெயர்க் காரணம்

அடை என்னும் சொல் நீரில் படரும் செடினங்களின் இலையைக் குறிக்கும். இங்கு அடை என்னும் சொல் அடை படர்ந்த ஊரைக் குறிக்கிறது. நெடுங்கிள்ளி, நெடுஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் என்னும் அரசர் பெயர்களிலும், நெடும்பல்லியத்தனார், நெடும்பார தாயனார் போன்ற புலவர் பெயர்களிலும் வருவது போல இப்புலவர் பெயரிலும் அடைமொழியாக அமைந்துள்ளது. கல்வியார் என்பது இப்புலவர்க்கு ஊர்மக்கள் இட்டு வழங்கிய பெயர்.

பாடிய பாடல்கள்

சஙக இலக்கியங்களில் இவர் பாடியதாக மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றும் புறநானூற்றில் இடம்பெறுகின்றன.

இவரது பாடல்கள் தரும் செய்திகள்:

புறம் 283

அழும்பில் என்னும் ஊர் நீர்நாய் விளையாடும் ஆற்றுப்பகுதியில் இருந்தது என்றும், முதலை மேயும் அகழியைக் கொண்டது என்றும், இவ்வூரில் வலம்புரிக் கோசர்கள் வாழ்ந்தனர் என்றும் இப்பாடலில் புலவர் குறிப்பிட்டுள்ளார். வலம்புரி கோசரின் அவைக்களம் வலம்புரிச் சங்கு போன்ற அமைப்பினைக் கொண்டது.
இங்குள்ள மணலில் மகளிர் தெற்றிப்பாவை விளையாடுவர். இவர்களது விளையாட்டு இந்தக் கோசரின் அவைக்கள விளையாட்டை விட நன்று என்கிறார் புலவர்.
பச்சைநிற இலைகளைக் கொண்ட தும்பைப்பூவை அரசன் நெற்றிக்கு மேலே அரசன் அணிந்திருந்தான் என்று கூறப்படுவதால் அரசனின் போரைப்பற்றி இப்பாடல் குறிப்பிடுகிறது என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது.

புறம் 344 மகப்பாற்காஞ்சி

இப்பாடல் அடி ஒன்றிலும் சிதைவு உள்ளது.
கணியன் சொல்லும் நல்லிலக்கணங்கள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை மணக்கப்போவது யார் என்று ஊரார் பேசிக்கொள்கின்றனர். இரண்டு பேர் அந்தப் பெண்ணை மணக்க விரும்புகின்றனர்.
ஒருவன் அந்தப் பெண்ணுக்குப் பரிச விலையாகத் தன் ஊரையும், சிறந்த செல்வங்களையும் தர முன்வருகிறான். அவனது ஊர் நெல் விளையும் வயல்களைக் கொண்டது. வயல்நெல்லை மயில்கள் மேய வரும். அந்த மயில்களை மகளிர் கைவளை குலுங்க வீசி ஓட்டுவர். அப்போது அந்த மயில்கள் அங்குள்ள துறைகளில் வளர்ந்திருக்கும் மருத மரத்தில் ஏறிக்கொள்ளும். அப்படிப்பட்ட ஊரையே அவளுக்கு விலையாகத் தர அவன் முன்வருகிறான்.
மற்றொருவன் அரசன். அவன் பகைநாட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பண்பில்லா ஆண்மை கொண்டவன்.
பெண்ணைப் பெற்றவர்கள் யாருக்கு அந்தப் பெண்ணைத் தரப்போகிறார்கள் என்பது ஊர் பேசிக்கொள்ளும் செய்தி.

புறம் 345 மகப்பாற்காஞ்சி

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.