அழும்பில்
அழும்பில் என்பது கோசர்களின் ஊர் ஆகும். கோசர் குடியினர் சங்ககாலத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே வாழ்ந்துவந்தனர். எனினும் அவர்களின் செல்வாக்குள்ள மையம் அழும்பில்.
சங்கப் பாடல்கள் தரும் செய்திகள்
- இவ்வூரில் வலம்புரி கோசர் குடியினரின் அவைக்களம் இருந்தது. அதில் அவர்கள் வலம்புரிச்சங்கு போல் அமர்ந்து கலந்தாய்வர். தலைவன் சங்கின் கூர்முனை உச்சி போல் அமர்ந்திருப்பான்.[1]
- அழும்பில் என்பது சோழநாட்டில் இருந்த ஓர் ஊர். பெரும்பூண் சென்னி என்னும் சோழவேந்தனின் வளமையான ஊர்களில் ஒன்று அழும்பில்.[2]
- அழும்பில் என்பவன் ஓர் அரசன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆண்டுகொண்டிருந்தபோது தன் நாட்டை இழந்த அழும்பில் அரசன் மதுரையில் வாழ்ந்துவந்தான். மதுரையின் மாடமாளிகைகளையும், செல்வ வளத்தையும் கண்டு அதனை அடைய விரும்பி நெடுஞ்செழியனோடு போரிட்டான். போரில் அழும்பில் தன் நாட்டையே இழக்கவேண்டியதாயிற்று. என்றாலும் நெடுஞ்செழியன் அவனைத் தன் தலைநகரில் சீரும் சிறப்புமாக வாழவைத்துப் பெருமைப்படுத்தினான்.[3]
மேற்கோள் குறிப்பு
- மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்,
வலம் புரி கோசர் அவைக் களத்தானும்,புறம் 283 - நன்னன்,
ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,அகம் 44 - நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்கு பெருந் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன, நாடு இழந்தனரும்,மதுரைக்காஞ்சி 345
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.