அசாம் மாகாணம்

அசாம் மாகாணம் (Assam Province) பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தை 1912-இல் பிரித்ததன் மூலம் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. இம்மாகாணத்தில் தலைநகரம் சில்லாங் ஆகும். முதன்முதலில் 1874-இல் வங்காள மாகாணத்திலிருந்து, அசாம் பகுதிகளை, பிரித்து வடகிழக்கு எல்லைப்புற முகமை பிரதேசம் நிறுவப்பட்டது. பின்னர் 1905-இல் வங்காளப் பிரிவினையின் போது, இம்முகமையை கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1912-இல் மீண்டும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது.

அசாம் மாகாணம் (1912 - 1947)
வடகிழக்கு எல்லைப்புற முகமை (1874 - 1905)
மாகாணம் of பிரித்தானிய இந்தியா

21 மார்ச் 1912–15 ஆகஸ்டு 1947
 

கொடி

Location of அசாம்
1936-இல் அசாம் மாகாணம் (சிவப்பு) மற்றும் அதன் கீழிருந்த மணிப்பூர் இராச்சியம் (பச்சை) மற்றும் காசி இராச்சியம் (மஞ்சள்)
வரலாறு
  கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணப் பிரிவினை 21 மார்ச் 1912
  இந்திய விடுதலை 15 ஆகஸ்டு 1947
பரப்பு 2,40,118 km2 (92,710 sq mi)

வரலாறு

1824 - 1826-இல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில், பிரித்தானிய இந்தியப் படைகள், பர்மிய இராச்சியம் கைப்பற்றிருந்த வடகிழக்கு இந்தியப் பகுதிகளை கைப்பற்றி பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தனர்.[1] 1826 முதல் 1832 முடிய அசாம் பகுதிகள் வங்காள மாகாணத்துடன் இருந்தது. மேல் அசாம் பகுதிகளை சுதேசி சமஸ்தான மன்னர்கள் ஆண்டனர். ஆனால் கீழ் அசாம் பகுதிகளை பிரித்தானியர்கள் ஆண்டனர். 16 அக்டோபர் 1905-இல் அசாம் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தின் கீழ் சென்றது. 1 ஏப்ரல் 1912-இல் மீண்டும் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளை ஒன்றிணைத்து வங்காள மாகாணம் மீண்டும் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் மற்றும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, 1944-ஆம் ஆண்டு மார்ச்-சூலையில் பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பானியப் படைகள் அசாம் மாகாணம் மற்றும் மணிப்பூர் இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, ஜப்பான் கைப்பற்றிய பிரித்தானிய இந்தியப் பகுதிகள் மீண்டும் அசாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் அசாம் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[2] 1972-இல் அசாம் மாகாணத்தை ஏழு மாநிலங்களாகப் பிரித்தனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.