அகநச்சு

அகநச்சு (Endotoxin) என்னும் நஞ்சானது நம் உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள, கட்டமைப்பு மூலக்கூறாகும்.

கிராம்-எதிர் பாக்டீரியா

அகநச்சின் கட்டமைப்பு

அகநச்சிற்கு முக்கிய உதாரணம் லைபோபாலிசாகரைட் எனப்படும் கொழுப்புப்பலசர்க்கரையாகும் (குறுக்கம்: LPS). பல்வேறு கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரில் காணப்படும் LPS மூலக்கூறானது, நுண்ணுயிரியிகள் நோயினை உண்டாக்கத் தேவைப்படும் காரணிகளுள் முக்கியமான ஒன்றாகும்.[1]

கொழுப்புப்பலசர்க்கரை Kdo2-கொழுப்பு-A வடிவம். குளுகோசமைன் படிவுகள் நீலத்தில், கீடோ -டிஆக்சி ஆக்டுலோசோனேட் (Kdo) படிவுகள் சிவப்பில், அசைல் தொடரிகள் கருப்பில் மற்றும் பாஸ்பேட் தொகுதிகள் பச்சை வண்ணங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

LPS, கொழுப்பு-A (lipid-A) மற்றும் சர்க்கரை தொடரியைக் கொண்டது. கொழுப்பு-A பகுதியானது இம்மூலக்கூற்றின் நச்சு விளைவுகளுக்குக் காரணமாகும். சர்க்கரை தொடரியானது வெவ்வேறு பாக்டீரியாகளுக்கிடையில் அதிகமாக வேறுபட்டுக் காணப்படும். தோராயமாக, அகநச்சுகளின் அளவு 10 கிலோ டால்டன்கள் என்றாலும், அகநச்சுகள் 1000 கிலோ டால்டன்களுக்குச் சமமான திரட்டுகளை உருவாக்கும் தன்மை உள்ளதாகும்.

கிராம்-நேர் பாக்டீரியா

1979- ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கிராம்-நேர் பாக்டீரியாவான லிஸ்டீரியா அகநச்சு-போன்ற பொருளை உருவாக்கலாம் என்று குறிப்பிட்டாலும்[2] பின்னர் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் இதை உறுதி செய்யவில்லை.[3]

ஆனால், பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்னும் ஒரு மண்வாழ் கிராம்-நேர் நுண்ணுயிர் டெல்டா அகநச்சினை உருவாக்கும் தன்மை கொண்டது.

பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் உருவாக்கும் பூச்சிகளைக் கொல்லும் டெல்டா அகநச்சின் படிக கட்டமைப்பு[4]

இரத்த நச்சுப் பரவல்

இரத்தத்தில் அகநச்சு காணப்படுவது இரத்த நச்சுப் பரவல் (endotoxemia) எனப்படும். இதற்கான எதிர் விளைவுகள் மிகைபடும்போது நச்சூட்டு அதிர்ச்சி (septic shock) ஏற்படுகின்றது.[5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.