வீரா (2018 திரைப்படம்)

வீரா (Veera), ராஜாராமன் இயக்கத்தில், எல்ரெட்குமாரின் தயாரிப்பில், கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் லியோன் ஜேம்சின் இசையில், குமரன்-விக்னேசின் ஒளிப்பதிவில், டி. எஸ். சுரேசின் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. 2015 படப்பணிகள் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் இல் இத்திரைப்படம் 16, பெப்ருவரி 2018 இல் வெளியானது.[1][2][3]

வீரா (2018 தமிழ்த்திரைப்படம்)
இயக்கம்ராஜாராமன்
தயாரிப்புஎல்ரெட்குமார்
கதைபாக்கியம்குமார்
இசைலியோன் ஜேம்ஸ்
நடிப்புகிருஷ்ணா
ஐஸ்வர்யா மேனன்
கருணாகரன்
ஒளிப்பதிவுகுமரன்-விக்னேஷ்
படத்தொகுப்புடி. எஸ். சுரேஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

கிருஷ்ணா - வீரமுத்துவாக ஐஸ்வர்யா மேனான் - நேணுகாவா கருணாகரன் - பச்சைமுத்துவாக இராசேந்திரன்- ஜோன்டி ரோடெஸ் யோகி பாபு - ஜித்தேஸாக சந்திரதீப்- குள்ள பொண்ணு குமார் கண்ணாரவி - சுறா முருகன் தம்பி ராமையா - ஏழுகிணறு ஏழுமலை ஆடுகளம் நரேன் - பாக்சர் இராஜேந்திரன் ராதாரவி - ஸ்கெட்ச் சேகர் ஆர்.என். ஆர் மனோகரன் - மாவட்டம் தமிழழகனாக

படப்பணிகள்

இப்படத்தினை சனவரி 2017இல் வெளியிடத் திட்டமிட்டார்கள், ஆனால் படப்பணிகள் படக்குழு அறிவித்தநாளுக்குப்பிறகும் தொடர்ந்தது.[4] இப்படம் ஆரஞ்சு கிரியேஷன்சிடம் செப்தம்பர் 2017இல் விற்கப்பட்டது, செப்தம்பருக்குப் பிறகு இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் போதிய திரையரங்குகளும் கிடைக்கவில்லை.[5][6][7]

கதை

முன்பொரு காலத்தில் வடசென்னைப்பகுதியில் சமுக மேம்பாட்டிற்காக சமூகநீதி சமத்துவத்திற்கா தொடங்கப்பட்ட மன்றங்கள், காலப்போக்கில் அதிகாரக்குழுக்களின் பிடியில் சிக்கி போக்கிலிகளின் உறைவிடமா மாறிவிடுகின்றன. இந்த சமுகநீதி மன்றத்துக்கு தலைவராவதையே நோக்கமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதைநாயகன் தன் இலக்கில் எ ன்ன நிலையை அடைகின்றார் என்பதே கதை.[8]

வீரமுத்து (கிருஷ்ணா), பச்சமுத்து (கருணாகரன்) இருவரும், ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மனமகிழ் மன்ற’த்தில் எடுபிடி வேலை செய்து வருபவர்கள். இந்த மனமகிழ் மன்றத்தின் தலைவரா இருக்கும் சுறா முருகனை (கண்ணா ரவி) ஒழித்துக்கட்டி தலைவராக வரவேண்டும் என எண்ணுகின்றார்கள். அவர்களுக்கு ஒருவரை கொல்லும் அளவிற்கு திறமை இல்லை. அதனால் ஸ்கெட்ச் சேகரிடம் (ராதாரவி) சென்று நுட்பங்களை கற்று வாருங்கள் என்று அவர்களை வழிநடத்துகின்றார் ஏழுமலை (தம்பி ராமையா). ஸ்கெட்சிடம் தொழில் கற்றவர்கள், தங்ககளின் கனவை நிறைவெற்றினார்களா? நினைத்தவாறு அ ந்த மனமகிழ் மன்றத்தை அடைந்தார்களா என்பதே திரைக்கதை.[9][10]

இசை

Untitled

இத்திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இவர் காஞ்சானா-2 (2015), கோ-2 (2016), கவலை வேண்டாம் (2016) ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்களை மார்ச் 23, 2017இல் சோனி மியூசிக் வெளியிட்டது.

திரைப்பாடல் விவரங்கள்
எண் தலைப்புபாடலாசிரியர்Singer(s) நீளம்
1. "வூட்டாண்ட சொல்ட்டுவா"  கோ. சேஷாலியோன் ஜேம்ஸ் 3:32
2. "வெரட்டாம விரட்டுவியா"  கோ. சேஷாசித் சீறிராம், நீதி மோகன் 4:36
3. "மாமா மாமா மயங்காதே"  கிருஷ்ணா கிஷோர்அந்தோணிதாசன் 3:08
4. "போகுதே கண்மணியே"  நா. முத்துக்குமார்பிரதீப் குமார் 3:38
5. "நிஜாரு உசாரு"  நா. முத்துக்குமார்லாரன்ஸ், மகாலிங்கம் 4:45

சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.