முதலாம் கார்க்கோவ் சண்டை

முதலாம் கார்க்கோவ் சண்டை (First Battle of Kharkov) 1941ல் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகும். இதில் ஜெர்மானியப் படைகள் தற்கால உக்ரைனில் உள்ள கார்க்கோவ் (கார்கீவ்) நகரைச் சுற்றி வளைத்துக் கைப்பற்றின.

முதலாம் கார்க்கோவ் சண்டை
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி

செருமனி காலாட்படையும் கவச வாகனங்களும் கார்கீவ் வீதிகளில் சோவியற் பாதுகாப்பாளர்களுடன் சண்டையிடுகின்றன.
நாள் 20–24 ஒக்டோபர் 1941
இடம் கார்கீவ், உக்குரேனிய சோவியற் சோசலிசக் குடியரசு
செருமனி நகரத்தை கைப்பற்றியது, உரசியர்கள் வெளியேறினர்
பிரிவினர்
 நாட்சி ஜெர்மனி  சோவியத் ஒன்றியம்
தளபதிகள், தலைவர்கள்
எர்வின் வியூரோ
அன்டன் டொஸ்ட்டர்
ஜோசப் பிறானர் வென் கைட்ரியன்
கூர்ட் வென் பரிசனி
விளாதிமிர் சிக்கானவ்
பலம்
2 டிவிசன்கள்
1 Sturmgeschütz-Abteilung பீரங்கி
10,000-30,000 பேர் (கணக்கிடப்பட்டது)
12 StuG III பீரங்கிகள்
1 டிவிசன்[1]
இழப்புகள்
தெரியாது தெரியாது[2]
உயர்வான இழப்பிற்கு சாத்தியம்

கார்க்கோவ் நகரம் மேல்நிலை உத்தியளவில் சோவியத் ஒன்றியத்தின் மிக முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-தெற்கு உக்ரைன், டினீப்பர், கிரிமியா, காக்கஸ், டோன்பாஸ் போன்ற பகுதிகளை ஒன்றிணைக்கும் மையமாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் முக்கிய போர் டாங்கான டி-34 ரக டாங்குகளைத் தயாரிக்கும் மாபெரும் தொழிற்சாலையும் அங்கு அமைந்திருந்தது. மேலும் மாஸ்கோவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஜெர்மானியப் படைகளை கார்க்கோவைத் தளமாகக் கொண்ட சோவியத் படைகள் பக்கவாட்டில் தாக்கும் சாத்தியமிருந்தது. இக்காரணங்களால் கார்க்கோவ் நகரைக் கைப்பற்றா ஜெர்மானிய உத்தியாளர்கள் முடிவு செய்தனர். ஜெர்மானிய ஆர்மி குரூப் தெற்கின் ஒரு பிரிவான 6வது ஆர்மியிடம் நகரைக் கைப்பற்றும் பொறுப்பு தரப்பட்டது. சோவியத் தரப்பில் 38வது ஆர்மி நகரைப் பாதுகாத்து வந்தது.

சண்டை தொடங்கும் முன்னரே நகரை நீண்ட நாள் பாதுகாக்க முடியாது என்பதை உணர்ந்த சோவியத் தளபதிகள், நகரின் தொழிற்சாலைகளைக் காப்பற்றுவதை முக்கிய இலக்காகக் கொண்டனர். கார்க்கோவின் தொழிற்சாலைகள் பிரித்தெடுக்கப்பட்டு கிழக்கே கொண்டு செல்லப்படும் வரை ஜெர்மானியப் படைகள் நகரைக் கைப்பற்றாது தடுக்க 38வது ஆர்மிக்கு உத்தரவிட்டனர். அக்டோபர் 20ம் தேதி ஜெர்மானியப் படைகள் கார்க்கோவ் நகரைத் தாக்கின. நான்கு நாட்கள் வரை சோவியத் பாதுகாவல் படைகள் நகரைப் பாதுகாத்தன. அக்டோபர் 24ம் தேதி நகர் ஜெர்மானியப் படைகள் வசமான போது, அதன் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை பிரித்தெடுக்கபபட்டு பாதுகாப்பாக சோவியத் ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பட்டுவிட்டன.

குறிப்புகள்

  1. According to Glantz 2001, p. 247-248, the strength of the weakened Southwestern Front on 30 September was 147,110 men, mostly survivors from the battle of Kiev. Reïnforcements sent after this date include several NKVD divisions and brigades fighting as regular ground units.
  2. According to Glantz 2001, p. 248, the losses of the Southwestern Front from 30 September to 30 November numbered 96,509 men, including 75,720 irrecoverable (dead, missing or captured) and 20,789 sick and wounded.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.