பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்

பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் (ஐஏடிஏ: PEK, ஐசிஏஓ: ZBAA) (எளிய சீனம்: 北京首都国际机场; மரபுவழிச் சீனம்: 北京首都國際機場; மாண்டரின் பின்யின்: Běijīng Shǒudū Guójì Jīchǎng; Jyutping: Bak1ging1 Sau2dou1 Gwok3zai3 Gei1coeng4) ஆனது பெய்ஜிங், சீனாவில் உள்ள முதன்மையான பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இது பெய்ஜிங் நகர மையத்திலிருந்து வடகிழக்கில் 32 km (20 mi) தொலைவில் சோயங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [3] மேலும் இது அரசுக்குச் சொந்தமான பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.

பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
北京首都国际机场
Běijīng Shǒudū Guójì Jīchǎng
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட்
Terminal 3
ஐஏடிஏ: PEKஐசிஏஓ: ZBAA
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை Public
இயக்குனர் பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட்
சேவை புரிவது பெய்ஜிங்
அமைவிடம் சோயங் மாவட்டம்
மையம்
உயரம் AMSL 116 ft / 35 m
ஆள்கூறுகள் 40°04′48″N 116°35′04″E
இணையத்தளம் en.bcia.com.cn
நிலப்படம்
PEK
Location in China
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
18L/36R 3 12,795 Asphalt
18R/36L 4 13,780 Asphalt
01/19 4 14,764 கான்கிரீட்[1]
புள்ளிவிவரங்கள் (2011)
பயணிகள் 78
Aircraft Movements 517
Statistics from Airports Council International,[2] China's busiest airports by passenger traffic
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
சீன எழுத்துமுறை 北京首都國際機場
எளிய சீனம் 北京首都国际机场

2009-ல் பயணிகள் போக்குவரத்து மற்றும் மொத்த போக்குவரத்து இயக்கங்கள் அடிப்படையில் ஆசியாவில் பரபரப்பான விமான நிலையம் எனப் பெயர் பெற்றது. பெய்ஜிங் விமான நிலையம், ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையத்தை அடுத்து பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையின் அடிப்படையில் சர்வதேச அளவில் இரண்டாமிடத்தில் (2011-ன் படி) உள்ளது. இந்த விமான நிலையம் 517,584 விமான இயக்கங்களை (take-offs and landings) 2010ல் பதிவு செய்ததன் மூலம் சர்வதேச அளவில் எட்டாம் இடத்தில் உள்ளது. சரக்கு போக்குவரத்து அடிப்படையிலும் பெய்ஜிங் விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2009-ல் 1,420,997 டன் சரக்குகளை கையாண்டு உலகிலேயே சரக்கு போக்குவத்தை கையாளும் விமான நிலையாங்களில் 14ஆம் இடத்தை பிடித்துள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.