பர்வீன் பாபி

பர்வீன் பாபி (Parveen Babi) (4 ஏப்ரல் 1949 – 20 ஜனவரி 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகி மற்றும் உட்புற வடிவமைப்பாளர் ஆவார். இவரின் திரைபடங்கள் வணிகரீதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

பர்வீன் பாபி
பிறப்புஏப்ரல் 4, 1949(1949-04-04)
ஜூனாகத், சௌராஷ்டிரா, இந்தியா
இறப்பு20 சனவரி 2005(2005-01-20) (அகவை 55)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
பட்டினி அல்லது உறுப்பு செயலிழத்தல்
கல்லறைசாண்டாக்ரூஸ் முஸ்லீம் கல்லறை, மும்பை, மகாராட்டிரம்
இருப்பிடம்ஜூஹூ, மும்பை, மகாராட்டிரம்
பணி
  • மாதிரி
  • நடிகை
  • கட்டிட உள்துறை வடிவமைப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1972–1973 (ஆடை நாகரிகம்), 1973-1990 (நடிகை)
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • தீவார் (1975)
  • அமர் அக்பர் அந்தோனி (1977)
  • சுஹாக் (1979)
  • ஷான் (1980)
  • காலியா (1982)
  • நமக் ஹலால் (1982)
சொந்த ஊர்ஜூனாகத், குஜராத், இந்தியா உயர் நிலைப் பள்ளிஹை ஸ்கூல் புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத், குஜராத்
உயரம்5 ft 7 in (1.70 m)

1970 களின் ஆரம்பத்திலும் 1980 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும், "தீவார்", "அமர் அக்பர் அந்தோணி" , "நாமக் ஹலால்" , "சுஹாக்" மற்றும் "ஷான்" போன்ற பிரபலமான படங்களில் அவரது நடித்த்தன் மூலம் பரவலாக அரியப்படுகிறார். இந்தி சினிமா வரலாற்றில் மிகவும் கவர்ச்சியான நடிகைகளில் ஒன்றாக கருதப்பட்டவர், பர்வீன் பாபி அவரின் காலத்தில் அதிக சம்பளம் பெறுபவராக இருந்தார். 1973-1990 க்கு இடையில் அவர் தீவிரமாக திரையில் தோன்றினார். இரண்டு தசாப்தங்களாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையில், பாபி பல்வேறு வகையான 50 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் தோன்றினார். பர்வீன் பாபி 1973 ஆம் ஆண்டில் "சரித்திரா" படத்தில் அறிமுகமாகி , விரைவில் ஒரு வெற்றிகரமான நடிகையாக , அவரது சமகாலத்திய நடிகையான சீனத் அமான் போலவே புகழ் பெற்றார். "டைம்" பத்திரிகையின் அட்டையில் தோன்றிய முதல் இந்தியர் பர்வீன் பாபி ஆவார். இவர் நடித்திருந்த மொத்த படங்களில் நடிகர் அமிதாப் பச்சனுடன் 12 படங்களில் தோன்றியுள்ளார்.

அவரது கடைசி படம் "இராடாக்குப்" பிறகு, பர்வீன் பாபி நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்ற பின் அமெரிக்க குடியுரிமை பெற்றார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், கபீர் பேடி, அமிதாப் பச்சன், டேனி டென்சோங்கா மற்றும் மகேசு பட் போன்ற பல நடிகர்களுடன் அவர் தொடர்பிலிருந்தார். அவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டதனல், பல உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு 20 ஜனவரி 2005 அன்று இறந்தார்.[1][2]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி

பர்வீன் பாபி குஜராத்தில் நீண்ட காலமாக குடியேறியிருந்த பஷ்தூன் மக்கள் என்ற பழங்குடியினரான பத்தான்கள் என்று அழைக்கப்படும் குடும்பத்தில் குசராத்து மாநிலத்தின் ஜூனாகத் என்ற இடத்தில் பிறந்தார். அவர் ஆரம்பக் கல்வியை அகமதாபாத்தில் தொடங்கி, பின்னர் அவர் அகமதாபாத் சேவியர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில். பட்டம் பெற்றார்.[3] அவரது தந்தை வலி முகம்மது கான் பாபி (1959 இல் இறந்தார்) ஜுனகத்தின் நவாப் மற்றும் ஜமால் பாக்தே பாபி ஆகியோருடன் (2001 இல் இறந்தார்) ஒரு நிர்வாகியாக பணியாற்றினார்.[4][5][6] தனது பெற்றோருக்கு பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார், அவர்களது ஒரே குழந்தையான பர்வீன் தனது பத்து வயதில் தந்தையை இழந்தார்.

பர்வீன் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் ஊடகங்களால் அவர் இயக்குனரான மகேசு பட் மற்றும் நடிகர்களான கபீர் பேடி, டேனி டென்சோங்கோ மற்றும் அமிதாப் பச்சன் போன்ற திரைப்படத் தொழில்களிலிருந்த ஆண்கள் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.[7][8][9]

இறப்பு

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அவர் வீட்டினுள் இறந்து கிடந்தார். மூன்று நாட்களாக அவரது வீட்டு வாசலில் இருந்து பால் மற்றும் பத்திரிகைகள் அப்படியே கிடந்த காரணத்தால் அவரது செயலாளர் காவலர்களை அழைத்து இவர் இறந்ததை உறுதி செய்தார்.[10] பர்வீன் பாபி தனது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் கிறித்துவத்திற்கு மாறியதாக, ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்,[11] தான் கிறிஸ்தவ முறைப்படி தான் புதைக்கப்பட வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார், ஆனால் அவரது உறவினர்கள் அவரது மரணத்திற்குப் பிறகு அவரது அவரை இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்தனர்.[12] மகாராட்டிரம் மாநிலம் மும்பையின் ஜூஹு கடற்கரையில் உள்ள சாண்டாக்ரூஸ் முஸ்லீம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[13]

குறிப்புகள்

  1. "Parveen Babi dies, alone in death as in life", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 22 January 2005.
  2. "Parveen wanted to be left alone", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 30 January 2005 Archived 5 December 2008 at the வந்தவழி இயந்திரம்.
  3. "St. Xavier's College – Ahmedabad – INDIA". stxavierscollege.net.
  4. "The Illustrious Babi Daynasty :: JunaGadh State". junagadhstate.org.
  5. The Babi Dynasty. royalark.net.
  6. "'Adopted son' claims Parveen Babi's crores". Sify.com (31 January 2005). பார்த்த நாள் 6 October 2012.
  7. "For Me, She Died Twice... | Mahesh Bhatt". Outlookindia.com. பார்த்த நாள் 6 October 2012.
  8. "Danny Denzongpa: Girls Are Attracted to Bad Guys | Entertainment". iDiva.com. பார்த்த நாள் 28 October 2012.
  9. "Amitabh on Parveen Babi". Rediff.com (27 January 2005). பார்த்த நாள் 6 October 2012.
  10. "Parveen Babi found dead in Mumbai" Archived 24 October 2008 at the வந்தவழி இயந்திரம்., இந்தியன் எக்சுபிரசு, 22 January 2005.
  11. "Church completes 125 years". The Times of India (20 November 2007). பார்த்த நாள் 6 October 2012.
  12. "'Parveen Babi wanted Christian last rites'". The Times of India. 23 January 2005. http://articles.timesofindia.indiatimes.com/2005-01-23/india/27854098_1_parveen-babi-trooped-into-juhu-police-babi-legacy. பார்த்த நாள்: 6 October 2012.
  13. "Chaos, confusion mark Parveen Babi’s funeral". expressindia.com.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.