நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்

நான்கு புனித தலங்கள் (Chota Char Dham) (தேவநாகரி: छोटा चार धाम) என்பது இந்தியாவின் இமயமலையில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்களைக் குறிப்பதாகும்.[1] [2] [3] ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இந்துக்கள் இந்நான்கு தலங்களுக்குக் பயணிப்பதை வடமொழியில் சார் தாம் யாத்திரை என்பர்.

நான்கு சிறு கோயில்கள்
கேதாரிநாத் பத்ரிநாத்
கங்கோத்ரி யமுனோத்திரி
கேதார்நாத்
பத்ரிநாத்
கங்கோத்திரி
யமுனோத்திரி
நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்
நான்கு புனித தலங்கள்
பெயர்
பெயர்:நான்கு சிறு தலங்கள்
தேவநாகரி:छोटा चार धाम
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:உத்தரகண்ட்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன் (கேதார்நாத்)
விஷ்ணு (பத்ரிநாத்)
கங்கா (கங்கோத்திரி)
யமுனா (யமுனோத்திரி)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:வட இந்தியக் கட்டிடக் கலை
கோயில்களின் எண்ணிக்கை:4
வரலாறு
கட்டப்பட்ட நாள்:அறியப்படவில்லை
அமைத்தவர்:பாண்டவர்

யாத்திரை

இந்நான்கு புனித தலங்களுக்கு செல்ல தில்லி, அரித்துவார் போன்ற நகரங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் உள்ளது.

  1. யமுனோத்திரி, யமுனை கோயில் அமைவிடம் மற்றும் யமுனை ஆற்றின் பிறப்பிடம்.
  2. கங்கோத்திரி, கங்கை ஆற்றின் பிறப்பிடம் மற்றும் கங்கோத்திரி கோயில் அமைவிடம்.
  3. கேதார்நாத், 12 சோதிலிங்க சிவத்தலங்களில் ஒன்றாகும்.
  4. பத்ரிநாத், பத்ரிநாராயணன் எனும் திருமால் கோயிலின் அமைவிடம்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.