திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில்
திருமாணிகுழி - திருமாணி வாமனபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]
தேவாரம் பாடல் பெற்ற திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருமாணிக்குழி |
அமைவிடம் | |
ஊர்: | திருமாணிக்குழி |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர் |
தாயார்: | அம்புஜாட்சி, மாணிக்கவல்லி |
தல விருட்சம்: | கொன்றை |
தீர்த்தம்: | சுவேத, கெடில நதி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
அமைவிடம்
இக்கோயில் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவகீந்திபுரம் வழியாக பானூர், பண்ருட்டி செல்லும் சாலையில் திருவகீந்திரபுரத்திற்கு அடுத்தபடியாக சுந்தர்பாடி என்னுமிடத்திற்கு அருகிலுள்ள சாத்தாங்குப்பம் வழிகாட்டி செல்லும் சாலையில் கெடில நதிப்பாலத்தை அடுத்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. [1]
சிறப்பு
திருமால் பிரமச்சாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தலம் என்பது ஐதிகம்.
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.