தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க முன்வந்ததைத் தொடர்ந்து மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு மே 13-ம் தேதி பொறுப்பேற்றது.
![]() | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|

ஆட்சியிலிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்த இத்தேர்தலில் முடிவுகளை முன்கூடியே கணிக்க இயலாத நிலை இருந்ததும், கருத்துக் கணிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக வாக்குச்சாவடியின் வெளியில் பெறப்பட்ட புள்ளியியல் கள ஆய்வு முடிவுகள் இருந்ததும், பதினைந்து ஆண்டுகளில் மிகக் கூடுதலான வாக்குப்பதிவும் சிறப்பு அம்சங்களாகும்.
2006 தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சி வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் பெற்றனர்.
வாக்குப்பதிவிற்குப் பின்னர் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில் மொத்தம் 70.22 விழுக்காடு வாக்குகள் பதிவாயின என்று தெரிவித்தார்.. இவற்றில் 51 விழுக்காடு ஆண்களின் ஓட்டுக்கள், 49 விழுக்காடு பெண்களுடையவை. வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக 18 வாக்குச்சாவடிகளில் மே 10, 2006 அன்று மறுவாக்குப்பதிவு நடந்தது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் மே 11, 2006 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும்பாண்மை பெற்றுள்ள போதும் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலை உள்ளது. இருந்தும், காங்கிரஸ், பா.ம.க., சி.பிஐ., மற்றும், சி.பி.எம். முதலிய கூட்டணிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்ததால், மு.கருணாநிதி தலைமையிலான 30 அமைச்சர்கள் கொண்ட தி.மு.க. அரசு மே 13-ம் தேதி பொறுப்பேற்றது.
தேர்தல் முடிவுகள்
2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[1] | ||||||
---|---|---|---|---|---|---|
கூட்டணி | கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் |
வென்ற தொகுதிகள் |
வைப்புத் தொகை இழப்பு |
வைப்புத் தொகை இழக்காத, வெற்றி பெற்ற தொகுதிகளில் வாக்கு சதவீதம் |
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளில் மொத்த வாக்கு சதவீதம் |
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி – 163 |
திராவிட முன்னேற்றக் கழகம் | 132 | 96 | 0 | 26.46 | 45.99 |
இந்திய தேசிய காங்கிரஸ் | 48 | 34 | 0 | 8.38 | 43.50 | |
பாட்டாளி மக்கள் கட்சி | 31 | 18 | 0 | 5.65 | 43.43 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (CPI) | 10 | 6 | 0 | 1.61 | 40.35 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (சிபிஎம்) | 13 | 9 | 0 | 2.65 | 42.65 | |
ஜனநாயக மக்கள் கூட்டணி-69 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 188 | 61 | 3 | 32.64 | 40.81 |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 35 | 6 | 0 | 5.98 | 37.70 | |
விடுதலைச் சிறுத்தைகள் | 9 | 2 | 0 | 1.29 | 36.09 | |
தனித்துப் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் | தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் | 232 | 1 | 223 | 8.38 | 8.45 |
சுயேச்சை | 1222 | 1 | 1217 | |||
பிற | 2 |
தகவல்: http://www.bbc.co.uk/tamil/news/story/2006/05/060511_tnelection.shtml
போட்டியிட்ட கட்சிகள்
- திராவிட முன்னேற்றக் கழகம்
- பாட்டாளி மக்கள் கட்சி
- இந்திய தேசிய காங்கிரஸ்
- பாரதிய ஜனதா கட்சி
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
- விடுதலைச் சிறுத்தைகள்
- புதிய தமிழகம்
- பார்வார்டு ப்ளாக்
- இந்திய தேசிய லீக்
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்
- லோக் பரித்ராண் – en:Lok Paritran
இவற்றையும் பார்க்க: பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்
முக்கிய விடயங்கள்
- ஊழல்
- ஆழிப் பேரலை, அடைமழை-வெள்ளப்பெருக்கு நிவாரண பிரச்சினைகள்
- குடிநீர் பிரச்சினை
- சூழல் மாசுறல்
- ஏழ்மை நிவாராண மத்திய வேலைத்திட்டத்தில் தமிழ் நாட்டு தேவைகள்
- மத்திய மாநில அரசு உறவு பிரச்சினைகள்
- மனித உரிமை பிரச்சினைகள்: முதற் குடிமக்கள், வீரப்பன் கொலை
- சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்
- உழவர் பிரச்சினைகள் ?
- அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்
- சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான சுமங்கலி கம்பிவழி தொலைக்காட்சி நிறுவனம்(Sumangali Cable Vision) அரசுடைமையாக்கம்
- தமிழ், தமிழ்வழிக் கல்வி
- தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு/எதிப்பு
- தமிழீழ மக்களுக்கு ஆதரவு/எதிப்பு
- இந்துவாதம்
வெளி இணைப்புகள்
- தமிழக சட்டமன்ற தேர்தல், 2006 குறித்த தகவல்கள் - இந்திய தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு தொகுதி வரைபடம், தொகுதிப் பெயர்களுடன்
- தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் - பிபிசி - தமிழ்
- வாக்குப்பதிவு: படங்கள்
- http://www.yourmla.com/ Tamilnadu Elections 2006 Complete Analysis
- தேர்தல் கூட்டு வலைப்பதிவு - தேர்தல் 2006
- 2006 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்