சூர்யவம்சம்

சூரிய வம்சம் (ஆங்கிலம்:Suryavamsam) விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி கதை பாத்திரங்களில் சரத் குமார்,தேவயானி , ராதிகா, மணிவண்ணன், மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் பாடல்வரிகள் மு. மேத்தா, பழனி பாரதி, ர. ரவிசங்கர் மற்றும் கலை குமார் அவர்களால் எழுதப்பட்டது. இப்படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவு எஸ்.ஏ. ராஜ்குமார் அவர்கள் மூலம் இயற்றப்பட்டது.[1]

சூரிய வம்சம்
Suryavamsham
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைவிக்ரமன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசரத்குமார்
ராதிகா
தேவயானி
மணிவண்ணன்
பிரியா ராமன்
ஒளிப்பதிவுஎஸ். சரவணன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
விநியோகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுசூன் 27, 1997
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

கதை சுருக்கம்

சூரியவம்சம் சூன் 27, 1997 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். தந்தையாக வரும் சரத்குமாருக்கு இணையராக (ஜோடி) ராதிகா அவர்களும் மகன் பாத்திரத்திற்கு தேவயானி அவர்கள் நடித்துள்ளனர். மேலும் ஆனந்தராஜ் இத்திரைப்படத்தின் வில்லன் வேடத்திலும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் மணிவண்ணன் மற்றும் ஆர். சுந்தரராஜன் ஆகிய இருவரும் தமது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கதைமாந்தர்கள்

  • சரத் குமார்- சின்னராசு/ சக்திவேல் கவுண்டர்
  • தேவயானி - நந்தினி
  • ராதிகா- சக்திவேல் கவுண்டரின் மனைவி
  • மணிவண்ணன்- சின்னராசுவின் சகதோழனாக
  • பிரியா ராமன்- கௌரி
  • ஜெய் கணேஷ்
  • அஜய் ரத்னம்
  • சத்ய பிரியா - நந்தினியின் தாய்
  • ஆனந்த ராஜ் - தர்மலிங்கம்
  • ராஜ குமாரன் - சிறப்பு தோற்றம்

பாடல்கள்

Untitled

இசைத் தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் மூலம் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளது.[2]

எண் தலைப்புபாடகர்கள் நீளம்
1. "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்) "  சுஜாதா 4:12
2. "காதலா காதலா"  ஹரிஹரன், சுவர்ணலதா 4:35
3. "சலக்கு சலக்கு"  அருன் மொழி, சுஜாதா 4:04
4. "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (ஆண்)"  ஹரிஹரன் 3:58
5. "நட்சத்திரச் ஜன்னலில்"  மனோ, சுனந்தா 4:56
6. "திருநாளுத் தேரழகா"  எஸ். ஏ. ராஜ்குமார், சுஜாதா 3:21

மற்ற மொழிகளில்

ஆதாரம்

  1. "சூரியவம்சம் திரைப்படத்தின் வரலாறு". pluz.in. பார்த்த நாள் சூன் 19, 2013.
  2. "சூரிய வம்சம் திரைப்பட இசை வரலாறு". Yahoo.com. மூல முகவரியிலிருந்து சனவரி 25, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சூன் 21, 2013.

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.