சின்னத்தம்பி பெரியதம்பி (திரைப்படம்)
சின்னத்தம்பி பெரியதம்பி என்பது 1987ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இப்படத்தில், சத்யராஜ், பிரபு, நதியா, சுதா சந்திரன், நிழல்கள் ரவி, விஜயன், காந்திமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். கங்கை அமரன் இசையமைத்த இப்படத்துக்கான பாடல்களை கங்கை அமரன், வைரமுத்து, "மாதம்பட்டி"சிவகுமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.
சின்னத்தம்பி பெரியதம்பி | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | தாரா சிவகுமார் கே. பத்மாவதி எம். எல். நல்லமுத்து |
கதை | மணிவண்ணன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சத்யராஜ் பிரபு நதியா சுதா சந்திரன் |
ஒளிப்பதிவு | ஏ. சபாபதி |
படத்தொகுப்பு | கௌதமன் |
கலையகம் | செம்பா கிரியேசன்சு |
விநியோகம் | செம்பா கிரியேசன்சு |
வெளியீடு | 27 பிப்ரவரி 1987 [1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சத்யராஜ் - பெரியதம்பி
- பிரபு - சின்னத்தம்பி
- நதியா - கவிதா
- சுதா சந்திரன்
- காந்திமதி - சின்னத்தம்பி, பெரியதம்பியின் பாட்டி
- விஜயன் - சுதா சந்திரனின் சகோதரர்
- நிழல்கள் ரவி
பாடல்கள்
கங்கை அமரன் இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி: நொ) |
1 | "சின்னத்தம்பி பெரியதம்பி" | கங்கை அமரன் | கங்கை அமரன் | 03:40 |
2 | "என் பாட்ட கேட்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 04:21 |
3 | "மாமன் பொண்ணுக்கு" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 04:09 |
4 | "மழையின் துளியிலே" | சித்ரா | வைரமுத்து | 04:21 |
5 | "ஒரு ஆல மரத்துல" | சித்ரா | மாதம்பட்டி சிவகுமார் | 04:20 |
6 | "ஒரு காதல்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 04:49 |
7 | "யா யா" | எஸ். பி. சைலஜா | கங்கை அமரன் | 04:04 |
தயாரிப்பு
தாரா சிவகுமார், கே.பத்மாவதி, எம்.எல்.நல்லமுத்து ஆகியோர் தயாரித்த இப்படத்தின் கதையை எழுதியவர் சண்முகப்பிரியன். படத்தை இயக்கிய மணிவண்ணன் திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் எழுதியிருந்தார்.
ஆதாரங்கள்
- http://www.jointscene.com/movies/kollywood/Chinna_Thambi_Periya_Thambi/2788
- "Chinna Thambi Periya Thambi Songs". tamiltunes. பார்த்த நாள் 2013-12-27.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.