இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டி
இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டி (இ.தொ.க. மண்டி, Indian Institute of Technology Mandi ) இமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி மாவட்டதில் அமைக்கப்படவுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்படவிருந்து 2009 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இரு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும். இக்கழகம் அமைப்பதற்கான வளர்ச்சி திட்டங்களையும் பாடதிட்டங்களையும் இ.தொ.க ரூர்க்கி மேற்பார்வையிட்டு வழிகாட்டும்.
2009-2010 கல்வியாண்டு பாடங்கள் இ.தொ.க ரூர்க்கி வழிகாட்டுதலில் அதன் வளாகத்தில் இயங்கத் துவங்கியுள்ளது.[1]
கல்வி திட்டங்கள்
தனது முதலாண்டில்,2009-2010, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- மின் பொறியியல்
- எந்திரப் பொறியியல்
ஒவ்வோரு பாடதிட்டத்திலும் 40 மாணவர்கள் முதலாண்டில் சேரவுள்ளனர்.
இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.