வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு

வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு (Northern Black Polished Ware culture) (சுருக்கப் பெயர்: NBPW or NBP) கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு காலத்திற்கு பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 - 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.[1]

வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் களங்கள், காலம் கிமு 700 - கிமு 200

பிந்தைய வேதகாலத்தின் துவக்கத்தில் கிமு 700 முதல் துவங்கிய வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு, கிமு 500 - 300 காலங்களில் உச்சத்தில் இருந்தது. இக்காலகட்டத்தில் வட இந்தியாவில் ஹரியங்கா வம்சத்தின் மகத நாடு உள்ளிட்ட 16 நகர மகாஜனபத அரசுகள் எழுச்சி கொண்டது.

மேலோட்டப் பார்வை

கிமு 500 - 100க்கும் இடைப்பட்ட காலத்தில் விளங்கிய வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் காலத்தின் கலைநயத்துடன் கூடிய கைப்பை, சோங்க் தொல்லியல் களம், அரசு அருங்காட்சியகம், மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா

வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் காலத்திய கலைப்பொருட்கள் பெயருக்கு ஏற்றவாறு கலைநயத்துடன் இருந்தது. இப்பண்பாட்டுக் காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தெற்காசியாவில் நகர அரசுகள் தோன்றியது.

சுட்ட செங்கற்கள், கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் மற்றும் பொதுக் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கட்டிடப் பணி, போர்க்கருவிகள், நகையணிகள் உற்பத்தி பெருகியதால் நகரப்புறங்களில் மக்கள்தொகை பெருகியதுடன் தச்சு வேலை, கொல்லு வேலை மற்றும் கைவினைக் கலைஞர்களின் கூட்டம் நகரங்களில் பெருகியது.[2]

இப்பண்பாட்டுக் காலத்தில் விலங்குகளின் தந்தம் மற்றும் சங்குகளில் நவரத்தினக்கற்கள் பதித்த வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்பொருட்கள், அளவைக் கருவிகள், கரோஷ்டி மற்றும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய முத்திரையிடப்பட்ட நாணயங்கள் மற்றும் அரசாங்க முத்திரைகள் வெளியிடப்பட்டது.

இப்பண்பாட்டுக் காலத்தில் அரிசி, நவதானியம், மக்காச்சோளத்தில் செய்த உணவுப்பொருட்கள் மக்களின் முக்கிய உணவானது. தொல்லியல் அறிஞர்கள் ஜியோப்பிரி சாமுவேல் மற்றும் டிம் ஹோப்கின்ஸ் ஆகியவர்களின் கூற்றின்படி, மத்திய கங்கைச் சமவெளிப் பகுதிகள், வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டின் மையமாக விளங்கியது அறியமுடிகிறது.[3]

தொல்லியல் களங்கள்

குறிப்பிடத்தக்க வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுத் தொல்லியல் களங்களில் சில மகாஜனபத நகர இராச்சியங்களுடன் தொடர்புடையவைகள். அவைகள்:[4]

இதனையும் காணக

மேற்கோள்கள்

உசாத்துணை

Samuel, Geoffrey (2010), The Origins of Yoga and Tantra: Indic Religions to the Thirteenth Century, Cambridge University Press

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.