சோ. தர்மன்

சோ. தர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 8, 1952) என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட இவர் ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது இவரது சூல் என்ற நூலுக்கு சிறந்த தமிழ் புதினத்துக்காக வழங்கப்பட்டது.[1][2]

சோ. தர்மன்
பிறப்புசோ. தர்மராஜ்
கோவில்பட்டி
தேசியம்இந்தியர்

இவர் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள கடலையூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சோ்ந்தவராவார். இவர் விவசாயக்குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தையின் பெயர் சோலையப்பன்.

1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "கூகை" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

நூல்கள்

  • கூகை
  • ஈரம்
  • தூர்வை
  • சோகவனம்
  • சூல்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.