ஹே ராம்
ஹே ராம், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமலஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹே ராம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கமலஹாசன் |
தயாரிப்பு | கமலஹாசன் |
கதை | கமலஹாசன் மனோகர் ஷியாம் ஜோஷி (இந்தி வசனங்கள்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமலஹாசன் ஷாருக் கான் ஹேமா மாலினி ராணி முகர்ஜி கிரிஷ் கர்னாட் நசுரூதீன் ஷா வசுந்தரா தாஸ் வி. எஸ். ராகவன் |
ஒளிப்பதிவு | திரு |
படத்தொகுப்பு | ரேணு சலுஜா |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் |
வெளியீடு | பெப்ரவரி 18, 2000 |
ஓட்டம் | 202 நிமிடம். (தமிழ்) 199 நிமிடம். (இந்தி) |
மொழி | தமிழ், ஹிந்தி |
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சாக்கேத் ராம் (கமலஹாசன்)ஒரு பிராமணராவார்,மற்றும் அவரின் நண்பரான அம்ஜத் அலி கான் ஒரு இஸ்லாமியர் இருவரும் அகழ்வாராய்ச்சியாளர்கள்.1940 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் இருவரும் மிக முக்கிய பங்கைவகிக்கின்றனர்.அங்கிருந்து பிரியும் இவர்கள் பின்னர் கலவரங்களின் மத்தியில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.கொல்கத்தா கலவரத்தில் தன் மனைவி (ராணி முகர்ஜி) கொல்லப்படுவதற்கு மகாத்மா காந்தியே காரணம் என்னும் தனது நண்பரின் கூற்றுப்படி மகாத்மா காந்தியை கொல்வதற்காக தன் மதத்தையும் வெறுத்து பின்னர் தன் இரண்டாம் தாரத்தையும் விடுத்து தனது குறிக்கோளை அடைய டெல்லிக்குச் செல்கின்றார்.அங்கு தனது கையடக்கத் துப்பாக்கியுடன் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் பட்சத்தில் காவல்துறையினரால் தேடப்பட்ட போது கையடக்கத் துப்பாக்கியை ஒரு ஊர்தி மேல் போட்டு விட்டார்.அவ்வூர்தியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே அங்கு செல்கின்றார் சாக்கேத் ராம் அங்கு தனது பழைய நண்பனான அம்ஜத்தையும் சந்திக்கின்றார்.பின்னர் தனது துப்பாக்கியைப் பெற்றுக் கொள்ளும் சாக்கேத் ராம் அங்கிருந்து மகாத்மா காந்தி உரையாற்றும் பட்சத்தில் சுடுவதற்கென ஏற்பாடுகளும் செய்கின்றார்.ஆனால் அவர் சுடுவதற்காகச் செல்லும் பொழுது கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகள் காந்தி மீது பாய்கின்றது.பின்னாட்களின் காந்தியின் அகிம்சைக் கொள்களின் மகிமைகளை அறிந்து அவரது காலணிகளை சாகேத் ராம் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.
விருதுகள்
2000 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த துணை நடிகர்- அதுல் குல்கர்னி
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த உடை அலங்காரம்- சரிகா
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த தந்திரக் காட்சிகள்- மந்த்ரா