ஹெராக்ளியன்
ஹெராக்ளியன்( Heracleion) அல்லது தோனிசு (Thonis) நகரம் எகிப்தில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியா அருகாமையில் இருந்த நைல் நதியின் துறைமுக நகரம். கி.மு 6 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் மிகப் பெரிய ஆதிக்கத்துடன் இருந்த இந்த நகரம், ஒரு இயற்கை பேரழிவில் கடலுக்குள் மூழ்கிப் போனது. [1].[2] உலகில் அழிந்து போன நகரங்களில் ஹெராக்ளியன் நகரமும் ஒன்றாகும்.
ஹெராக்ளியன் | |
---|---|
![]() | |
இருப்பிடம் | அலெக்சாந்திரியா அருகில், எகிப்து |
ஆயத்தொலைகள் | 31°18′15″N 30°06′02″E |
பழங்கால வரலாறு

திராயன் போர் தொடங்குவதற்கு முன் பாரிசு எசுபார்த்தாவின் அரசியாக விளங்கிய ஹெலன் மற்றும் மெனெலசு ஆகியோர் ஹெராக்ளியன் நகரில் தங்கியிருந்தனர்.[3]
தொல்பொருளியல்

ஹெராக்ளியன் நகரில் ஹெராக்ளியஸ் என்று கிரேக்கர்களால் அறியப்பட்ட கொன்சுவின் மகன் அமுனுக்கு பெரிய கோவில் இருந்தது.[4]ஹெராக்ளியன் நகரம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 6 ஆம் நூற்றாண்டு வரை தழைத்தோங்கியது.[2]
ஹெராக்ளியன் நகரின்அழிவு
ஹெராக்ளியன் நகரம் தொடர்ந்து நில நடுக்கம் காரணமாகவும் பெரு வெள்ளத்தாலும் கி.மு.3 வது மற்றும் கி.மு. 2 வது நூற்றாண்டில் கடலில் மூழ்கியது. கி.பி.2000ம் வருடம் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த நகரத்தை மீண்டும் கண்டுபிடித்தனர்.[5]]
மேற்கோள்கள்
- Topography and Excavation of Heracleion-Thonis and East Canopus ,2007,Oxford Ctr for Maritime Archeology, ISBN 978-0-9549627-3-9
- "Lost city of Heracleion gives up its secrets". The Telegraph. பார்த்த நாள் 2013-06-06.
- Stephanus of Byzantium. "Θῶνις" (in Greek). Ethnika kat' epitomen. https://archive.org/stream/stephanibyzanti00meingoog#page/n332/mode/2up.
- Anne Burton, Diodorus Siculus, Book 1: A Commentary. BRILL, 1972 ISBN 9004035141 p105
- Goddio, Franck. "Heracleion". Sunken civilisation. பார்த்த நாள் 2013-06-06.