ஹல்டிகாட்

ஹல்டிகாட் (Haldighati), மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில், ராஜ்சமந்து மாவட்டத்தையும், பாலி மாவட்டத்தையும் இணைக்கும் கணவாய் பகுதியாகும்.

ஹால்டிகாட் கணவாயின் மஞ்சள் நிற மண்
ஹால்டிகாட் கணவாயின் மஞ்சள் நிற மண்

ஹல்டிகாட் கணவாய் உதய்பூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பெயர்க் காரணம்

இப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிற மண்னால் ஹல்டிகாட் எனப் பெயர் பெற்றது. இந்தி மொழியில் ஹல்டி என்பதற்கு மஞ்சள் எனப் பொருளாகும்.[1]

வரலாறு

ஹல்டிகாட் மலைக்கணவாய் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இப்பகுதியில் மேவார் மன்னர் மகாராணா பிரதாப் படைகளுக்கும், மான் சிங் தலைமையிலான முகலாயப் பேரரசுப் படைகளுக்கும் 1,576-இல் கடுமையான போர் நடைபெற்றது.

நினைவுச் சின்னங்கள்

மகாராண பிரதாப்பின் சேத்தக் குதிரையின் கல்லறை, ஹால்டிகாட், இராஜஸ்தான்
ஒலி – ஒளி காட்சிகளுடன் கூடிய மகாராணா பிரதாப் அருங்காட்சியகம், ஹால்டிகாட், இராஜஸ்தான்

ஹல்டிகாட் போரில் மகாராணா பிரதாபின் குதிரையான சேத்தக் முக்கியப் பங்காற்றியது. போரில் பலத்த காயம் அடைந்த சேத்தக் குதிரை 21 சூன் 1576-இல் இறந்தது. மகாராணா பிரதாப் சேத்தக் குதிரைக்கு மரியாதை செய்விக்கும் முகமாக தனியாக கல்லறையில் அடக்கம் செய்து நினைவுச் சின்னம் அமைத்தார். 2009-இல் இந்திய அரசு மகாராணா பிரதாப்பின் ஒலி - ஒளியுடன் கூடிய அருங்காட்சியகத்தை திறந்து வைத்தது. [2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Haldighati". http://www.udaipur.org.uk/excursions/haldighat-in-udaipur.html.
  2. www.haldighati.com, http://www.haldighati.com/, பார்த்த நாள்: January 19, 2010

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.