ஹரீஷ் ராவத்

ஹரீஷ் ராவத் (Harish Rawat) (இந்தி: हरीश रावत; பிறப்பு ஏப்ரல் 27, 1947) உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், பதினைந்தாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது விவசாயத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறையின் இணை அமைச்சராக பதவி வகித்தார். இவருக்கு 28 அக்டோபர் 2012 அன்று கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டு, நீர் நிலைகளுக்கான பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு ஹரீஷ் மாநிலங்களவை உறுப்பினராகவும், உத்தராகாண்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினராகவும் இருந்தார். இவர் உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 1 பிப்ரவரி 2014 அன்று பதவியேற்றார்.[1]

ஹரீஷ் ராவத்
பதவியில்
11 மே 2016  18 மார்ச் 2017
பதினைந்தாவது மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009–2014
தொகுதி அரித்வார்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
2002–2008
தொகுதி உத்தராகண்டம்
7வது, 8வது மற்றும் 9வது மக்களவை உறுப்பினர்
பதவியில்
1980-1991
முன்னவர் முரளி மனோகர் ஜோஷி
பின்வந்தவர் ஜீவன் சர்மா
தொகுதி அல்மோரா
மத்திய நீர் வளத்துறை அமைச்சர்
பதவியில்
30 அக்டோபர் 2012  31 சனவரி 2014
முன்னவர் பவன் குமார் பன்சால்
பின்வந்தவர் உமா பாரதி
தனிநபர் தகவல்
பிறப்பு 27 ஏப்ரல் 1947 (1947-04-27)
மோகனாரி, அல்மோரா மாவட்டம், உத்தராகண்டம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
படித்த கல்வி நிறுவனங்கள் இலக்னோ பல்கலைக்கழகம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் இப்பதவியை 04.07.2019 அன்று இராஜினாமா செய்தார்.[2]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.