ஹனுமா விஹாரி

ஹனுமா விஹாரி (பிறப்பு:அக்டோபர் 13, 1993) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் ஆந்திரப் பிரதேசமாநில அணிக்காக விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை புறத்திருப்பப் பந்து வீச்சாளரும் ஆவார். 2012 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தொடரில் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.[1] 2018 இங்கிலாந்துத் தொடரில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.


ஹனுமா விஹாரி
இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கதே ஹனுமா விஹாரி
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை புறத் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 292) 7 செப்டம்பர், 2018:  இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2010–2016 ஐதராபாத் மாநிலத் துடுப்பாட்ட அணி
2013, 2015 சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2017–தற்போது வரை ஆந்திரப் பிரதேச மாநிலத் துடுப்பாட்ட அணி
அனைத்துலகத் தரவுகள்
மு தப அஇ 20
ஆட்டங்கள் 63 56 65
ஓட்டங்கள் 5,142 2,268 1,219
துடுப்பாட்ட சராசரி 59.79 47.25 21.38
100கள்/50கள் 15/24 4/13 0/4
அதியுயர் புள்ளி 302* 169 81
பந்துவீச்சுகள் 1,390 678 360
விக்கெட்டுகள் 19 12 21
பந்துவீச்சு சராசரி 39.42 45.50 20.90
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0
10 விக்/ஆட்டம் 0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/17 2/18 3/28
பிடிகள்/ஸ்டம்புகள் 64/1 17/0 27/2

23 ஆகத்து, 2018 தரவுப்படி மூலம்: கிரிக் இன்ஃபோ

சர்வதேச போட்டிகள்

ஆகஸ்டு, 2018 இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2018 இல் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இறுதி இரண்டு தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடுவதற்காக இவர் தேர்வானார்.[2] செப்டம்பர் 7, 2018 இல் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[3] ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[4][5]

சான்றுகள்

  1. "India Under-19s Squad". பார்த்த நாள் 8 செப்டெம்பர் 2018.
  2. "India call up Prithvi Shaw, Hanuma Vihari for last two Tests in England". ESPN Cricinfo. பார்த்த நாள் 22 August 2018.
  3. "5th Test, India tour of Ireland and England at London, Sep 7-11 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 7 September 2018.
  4. "India vs England: Hanuma Vihari scores fifty on debut to keep visitors afloat". hindustan times. 9 September 2018. https://www.hindustantimes.com/sports/india-vs-england-hanuma-vihari-scores-fifty-on-debut-to-keep-visitors-afloat/story-IRTO7ibsXvVeb3o1gRlGBO.html.
  5. "5th Test, India tour of Ireland and England at London, Sep 7-11 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 7 September 2018.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.