ஸ்ரீநிவாச கல்யாணம்
ஸ்ரீநிவாச கல்யாணம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புராணத் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், செருகளத்தூர் சாமா, ஆர். பி. லக்ஸ்மி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ஸ்ரீநிவாச கல்யாணம் | |
---|---|
தயாரிப்பு | ஏ. நாராயணன் ஸ்ரீநிவாசா சினிடோன் |
கதை | ராமாநுஜ ஐயங்கார் |
இசை | சி. ஆர். எஸ். மூர்த்தி |
நடிப்பு | பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் சாமா ஆர். பி. லக்ஸ்மி தேவி பி. எஸ். கமலவேணி |
ஒளிப்பதிவு | ஆர். பிரகாஷ் |
வெளியீடு | 1934 |
நீளம் | 11000 அடி |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
ஆர். பி. லக்ஸ்மி தேவி
பி. எஸ். கமலவேணி
செருகளத்தூர் சாமா
எம். டி. பார்த்தசாரதி
கே. எஸ். அங்கமுத்து[1]
தயாரிப்பு குழு
தயாரிப்பாளர்: ஏ. நாராயணன்
வசனம், பாடல்கள்: இராமாநுஜ ஐயங்கார்
இசை: சி. ஆர். எஸ். மூர்த்தி
ஒளிப்பதிவு: ஆர். பிரகாஷ்
ஒலிப்பதிவு: மீனா நாராயணன் (முதலாவது பெண் ஒலிப்பதிவாளர்)
கலை: சி. எஸ். இராணி[1]
துணுக்குகள்
- சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பெற்ற முதலாவது தமிழ்த் திரைப்படமாகும்.[1]
மேற்கோள்கள்
- "1934 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம் - ஸ்ரீனிவாசன் கல்யாணம்". lakshmansruthi.com. பார்த்த நாள் 2016-10-05.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.