ஸ்டீவன் ஆர். மெக்குயின்

ஸ்டீவன் ஆர். மெக்குயின் (Steven Chadwick McQueen, பிறப்பு: ஜூலை 13, 1988) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் ஜெர்மி கில்பர்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் மினிட்மென், பிரன்ஹா 3டி போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்டீவன் ஆர். மெக்குயின்
பிறப்புஸ்டீவன் சாட்விக் மெக்குயின்
சூலை 13, 1988 (1988-07-13)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2005–நடப்பு
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி வாம்பயர் டைரீஸ்
பெற்றோர்சாட் மெக்குயின்
சடசியா ராபிடைல்லே
உறவினர்கள்ஸ்டீவ் மெக்குயின் (தாத்தா)
நெய்லே ஆடம்ஸ் (பாட்டி)
லுக் ராபிடைல்லே (மாற்றாந் தகப்பன்)
என்றீக் இக்லெசியாசு (இரண்டாவது உறவினர் - தந்தைவழி பாட்டியின் வரிசையில்)

ஆரம்பகால வாழ்க்கை

மெக்குயின் 13, ஜூலை, 1988ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்காவில் பிறந்தார். இவரின் தந்தை சாட் மெக்குயின் ஒரு நடிகர் மற்றும் தாயார் சடசியா ராபிடைல்லே இவரும் ஒரு நடிகை ஆவார்.

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புக்கள்
2006 கிளப் சோடா தி கிட் குறும்படம்
2008 மினிட்மென் டெரெக் டிஸ்னி சேனல் திரைப்படம்
அமெரிக்கன் பிரேக்டவுன் தி கிட் குறும்படம்
2010 பிரன்ஹா 3டி ஜேக் ஃபாரஸ்ட் முக்கிய பாத்திரம்

சின்னத்திரை

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2005 த்ரெஷோல்டு ஜோர்டான் பீட்டர்ஸ்
2005–2006 எவர்வூத் கைல் ஹண்டர் 7 அத்தியாயங்கள்
2008 Numb3rs கிரேக் எஸ்றா அத்தியாயம்: அடோமிக் நோ.33
வித் அவுட் அ ற்றசே வில் டன்கன்
சிஎஸ்ஐ: மியாமி கீத் வால்ஷ் அத்தியாயம்: கோனே பேபி கோனே
2009–தொடக்கம் தி வாம்பயர் டைரீஸ் ஜெர்மி கில்பர்ட் முதன்மை நடிகர்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.