ஸ்கொக் பரிசு

ஸ்கொக் பரிசு அல்லது ரோல்ஃப் ஸ்கொக் பரிசு (Rolf Schock Prize) , மெய்யியலாளரும், ஓவியருமான ரோல்ஃப் ஸ்கொக் என்பவர் இதற்கென விட்டுச்சென்ற சொத்துக்களின் வருமானத்தின் மூலம் நிறுவப்பட்டது. இது முதல் தவையாக சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் 1933 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகை தற்போது 400,000 சுவீடிய குரோனா (59,000 அமெரிக்க டாலர்) ஆக உள்ளது. பரிசுகள் நான்கு வகைகளாக வழங்கப்படுவதுடன், மூன்று சுவீடிய ராயல் அக்கடமிகளைச் சேர்ந்த குழுக்கள் பரிசுக்குரியவர்களைத் தெரிவு செய்கின்றன.

  • ஏரணமும், மெய்யியலும் (அறிவியல்களுக்கான ராயல் சுவீடிய அக்கடமியால் முடிவு செய்யப்படுகிறது)
  • கணிதம் (அறிவியல்களுக்கான ராயல் சுவீடிய அக்கடமியால் முடிவு செய்யப்படுகிறது)
  • காண்கலைகள் (கலைகளுக்கான ராயல் சுவீடிய அக்கடமியால் முடிவு செய்யப்படுகிறது)
  • இசைக் கலைகள் (இசைக்கான ராயல் சுவீடிய அக்கடமியால் முடிவு செய்யப்படுகிறது)

ஏரணத்துக்கும் மெய்யியலுக்குமான பரிசு பெற்றவர்கள்

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993வில்லார்ட் வி. குவைன் ஐக்கிய அமெரிக்கா
1995மைக்கேல் டம்மெட் ஐக்கிய இராச்சியம்
1997தனா எஸ். ஸ்கொட் ஐக்கிய அமெரிக்கா
1999ஜோன் ராவுல்ஸ் ஐக்கிய அமெரிக்கா
2001சவுல் ஏ. கிரிப்கே ஐக்கிய அமெரிக்கா
2003சொலமன் ஃபெஃபெர்மான் ஐக்கிய அமெரிக்கா
2005ஜாக்கோ ஹிண்டிக்கா பின்லாந்து
2008தோமஸ் நாகெல் யுகோசுலாவியா /  ஐக்கிய அமெரிக்கா

கணிதத்துக்கான பரிசு பெற்றவர்கள்

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993எலியாஸ் எம். ஸ்டெயின் ஐக்கிய அமெரிக்கா
1995ஆண்ட்ரூ வைல்ஸ் ஐக்கிய இராச்சியம்
1997மிக்கோ சாட்டோ சப்பான்
1999யூரிஜ் மானின் உருசியா
2001எல்லியட் எச். லியெப் ஐக்கிய அமெரிக்கா
2003ரிச்சார்ட் பி. ஸ்டான்லி ஐக்கிய அமெரிக்கா
2005லூயிஸ் கஃபாரெல்லி அர்கெந்தீனா
2008எண்ட்ரே செமெரேடி அங்கேரி /  ஐக்கிய அமெரிக்கா

காண்கலைகளுக்கான பரிசு பெற்றோர்

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993ராபேல் மொனியோ எசுப்பானியா
1995கிளயேஸ் ஓல்டன்பர்க் ஐக்கிய அமெரிக்கா
1997டோர்ஸ்ட்டன் அண்டர்சன் சுவீடன்
1999ஜாக்குவெஸ் ஹெர்சோக் மற்றும்
பியரே டி மெயுரோன்
 சுவிட்சர்லாந்து
2001கியுசெப்பே பெனோன் இத்தாலி
2003சுசான் ரொதென்பர்க் ஐக்கிய அமெரிக்கா
2005கசுயோ செஜிமா மற்றும்
ரியுவே நிஷிசாவா
 சப்பான்
2008மோனா ஹட்டூம் லெபனான் /  ஐக்கிய இராச்சியம்

இசைக் கலைகளுக்கான பரிசு பெற்றோர்

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993இனோவார் லிதோம் சுவீடன்
1995கியோர்கி லிகெட்டி உருமேனியா /  ஆஸ்திரியா
1997ஜோர்மா பனூலா பின்லாந்து
1999குரோனொஸ் குவார்ட்டெட் ஐக்கிய அமெரிக்கா
2001கைஜா சாரியாஹோ பின்லாந்து
2003ஆன்-சோபீ வொன் ஓட்டெர் சுவீடன்
2005மௌரீசியோ காகெல் செருமனி
2008கிடொன் கிரேமர் லாத்வியா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.