வைனைல் பலபடிகள்

வைனைல் பலபடிகள் (Vinyl polymers, வைனைல் பாலிமர்கள்) என்பவை பல வினைல் ஒருமம்கள் இணைந்து உருவாகும் பலபடி சேர்மமாகும். விரிவுபட்ட ஆல்க்கேன் சங்கிலியே இவற்றுக்கு பிரதானமாகும். இவ்வினையில் ஒரு (C=C) ஆல்க்கீன் தொகுதி (..-C-C-C-C-..) தொகுதியாக பலபடியாகிறது. பொதுப் பயன்பாட்டில் வைனைல் என்ற சொல்லாட்சி பாலி வினைல் குளோரைடைக் குறிப்பதாகும். வைனைல் பலபடிகள் பொதுவாக காணப்படும் நெகிழி வகையாகும்:

  • எளிய ஆல்க்கீன் பலபடிகள்: எத்திலீன் பாலிஎத்திலீனாதல், புரோப்பிலீன் பாலிபுரொப்பலீனாதல் மற்றும் பியூட்டா டையீன், பாலிபியூட்டாடையீனாதல் போன்ற வினைகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
  • வைனைல் பென்சீன் அல்லது "ஸ்டைரீன்" இணைந்து பாலிஸ்டைரீன் உருவாதல்.
  • வைனைல் அசிட்டேட் ஒருமம் பல்லுறுப்பாக்கல் வினை மூலமாக பாலி வைனைல் அசிட்டேட் ஆக மாறுதல். இது ஒரு பசையாக உபயோகமாகிறது.
  • அக்ரைலோநைட்ரைலில் இருந்து பாலி அக்ரைலோநைட்ரைல் தயாரித்தல்
வினைல் பலபடியாலான பொருள், பல வண்ணங்களில் கிடைக்கிறது

1,2 இல் பிரதியிடப்பட்ட மற்ற வினைல் ஒருமம்கள் பலபடியாக்க வடிவங்களைக் கொண்டிருந்தாலும் இடத்தடங்கல் காரணமாக அவற்றால் பொதுவாக பலபடியாக இயல்வதில்லை. ஆனால் விதிவிலக்காக ஒருமம் பியூமரோ நைட்ரைல்[1] மட்டும் வழக்கத்திற்கு மாறான வினைவழி முறையில் பலபடியாக மாறுவது கண்டறியப்பட்டுள்ளது.

வினைவேக மாற்றிகளின் வலிமையால் வினைல் பலபடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தைட்டானியம் மையப்படுத்திய சீக்லர்-நட்டா வினையூக்கி முக்கிய நவீனகால வணிக ஊக்கியாக இருக்கிறது.

ஒரு வெற்றிட அறையில் 173 பாகை செல்சியசு வெப்பநிலையில் டாண்ட்டலம் தளப்பொருளின் மீது மிக மெல்லிய படலமாக ஒருமம் எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் ஒளியால் பலபடியாக்கப்படுகிறது. கதிர்வீச்சின் குறைவான ஊடுறுவல் காரணமாக பலபடியாக்கல் வீதம் 10000 அளவுள்ள மிக மெல்லிய நுண்ணளவு தடிமன் கொண்ட பலபடி படலங்கள் பெறப்படுகின்றன. இங்கு பலபடியாக்கல் வினை நிகழ்வதற்குரிய காரணம் யாதெனில் படலத்தில் உள்ள ஒரும மூலக்கூறுகள் முற்றிலும் ஒழுங்கற்று இருக்கின்றன. அதனால் படிகமுகமல்லாத இரண்டு ஒருமம்கள் வினைபுரிவதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது.

மேற்கோள்கள்

  1. Polymerization of "Unpolymerizable" Molecules through Topological Control Seth Washburn, Jochen Lauterbach, and Christopher M. Snively Macromolecules; 2006; 39(24) pp 8210 - 8212; (Communication to the Editor) எஆசு:10.1021/ma061724j 10.1021/ma061724j
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.