வேர்ட்பிரசு
வேர்ட்ப்ரஸ் (WordPress), ஒரு வலைப்பதிவு மென்பொருளாகும். இது பி.எச்.பியில் எழுதப்பட்டு மையெசுக்யூயெல் தரவுத்தளத்தால் தாங்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வலைப்பதிவுகள் இதைப் பயன்படுத்தி வெளியிடப்படுகின்றன. ஆகஸ்ட் 2013 கணக்கெடுப்பின் படி உலகின் தலைசிறந்த 10 மில்லியன் வலைதளங்களில் 22% தளங்கள் வேர்ட்பிரசு மூலம் இயங்கின.[4]
![]() | |
---|---|
![]() வேர்ட்ப்ரஸ் இயல்பிருப்புத் தோற்றம் | |
உருவாக்குனர் | வேர்ட்ப்ரஸ் பவுண்டேசன் |
தொடக்க வெளியீடு | மே 27, 2003[1] |
அண்மை வெளியீடு | 4.5.3 (சூன் 21, 2016 )[2] |
இயக்கு முறைமை | இயக்குதள சார்பு இல்லை. |
தளம் | பி.எச்.பி |
மென்பொருள் வகைமை | வலைப்பதிவு மென்பொருள் |
உரிமம் | GNU GPLv2+[3] |
இணையத்தளம் | wordpress.org |
வேர்ட்பிரஸ் ஆனது Michel Valdrighi என்பவரினால் தயாரிக்கப்பட்ட b2/cafelog என்னும் மென்பொருளின் உத்தியோக பூர்வமான தொடர்ச்சியாக இருக்கின்றது.
இதன் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
சிறப்புப் பண்புகள்
வேர்ட்பிரஸ் வார்ப்புருக்களை மையமாக்கொண்டு செயற்படுகின்றது, இதனால் HTML, PHP போன்றவற்றைத் தொகுக்காமலேயே பக்கங்களின் தோற்றங்களை மாற்றியமைக்கலாம். வார்ப்புருகளையும் இலகுவாக மாற்றிக்கொள்ளலாம். மேலதிக வடிவமைப்பு வேலைகளுக்கு HTML, PHP போன்றவற்றைத் தொகுத்து அமைத்துக்கொள்ளலாம்.
வெளியீட்டு வரலாறு
1.0 பதிப்பிற்குப் பிறகு வெளிவந்த அனைத்து முக்கிய பதிப்புகளுக்கும் பிரபலமான ஜாஸ் இசை கலைஞர்களின் பெயர் சூட்டப்படுகிறது[5]
மேலும் அறிய
- Douglass, Robert T.; Mike Little, Jared W. Smith (2005). Building Online Communities With Drupal, phpBB, and WordPress. New York: Apress. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59059-562-9.
- Hayder, Hasin (2006). WordPress Complete. United Kingdom: Packt Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-90481-189-2.
- Langer, Maria; Miraz Jordan (2006). WordPress 2 (Visual QuickStart Guide). USA: Peachpit Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0321450197.
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- வேர்ட்பிரஸ் உத்தியோகபூர்வ தளம், including documentation
- வேர்ட்பிரஸ் MU உத்தியோகபூர்வ தளம், including documentation
- WordPress themes
- Mullenweg, Matt. "WordPress Now Available". WordPress. பார்த்த நாள் 2010-07-22.
- "WordPress 4.5.3 Maintenance and Security Release". பார்த்த நாள் 06 ஜூலை 2016.
- "WordPress: About: GPL". WordPress.org. பார்த்த நாள் 15 June 2010.
- "Usage Statistics and Market Share of Content Management Systems for Websites". W3Techs (August 2013). பார்த்த நாள் August 2013.
- "Roadmap". Blog. WordPress.org. பார்த்த நாள் 2010-06-15.