வெள்ளையாம்பட்டு சுந்தரம்

வெள்ளையாம்பட்டு சுந்தரம் விழுப்புரம் மாவட்டம் வெள்ளையாம்பட்டில் பிறந்தவர் ஆவார்.

பன்முகம்

சிறந்த தமிழ் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர் என்ற நிலைகளில் பன்முகத் தன்மை வாய்ந்தவர். தன்னுடைய தொடர்ந்த வாசிப்பின் காரணமாக தமிழில் புலமை பெற்று விளங்கியவர். [1] இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். [2]

அறிஞர் தொடர்பு

க.அப்பாத்துரையார், வீ. முனிசாமி, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், அ. ச. ஞானசம்பந்தன், ம.பொ.சிவஞானம், வாணிதாசன், சுரதா உள்ளிட்ட பலருடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர். 1946இல் பகுத்தறிவாளரான இவர் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராகவும், பல திரைப்படங்களுக்க உதவி இயக்குநராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இரா.நாகசாமி, இரா. கலைக்கோவன், நடன. காசிநாதன், மா.சந்திரமூர்த்தி, ச.கிருஷ்ணமூர்த்தி ஆகிய அறிஞர்களோடு தொடர்பு கொண்டிருந்தவர். [1]

பதிப்புப்பணி

1963இல் சேகர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் துவக்கிய இவர், 1,100 நூல்களைப் பதிப்புத்துள்ளார். இவர் பதிப்புத்துள்ள நூல்களில் கல்வெட்டு, செப்பேடு, கோயில்கள் மற்றும் ஊர்களைப் பற்றியவை உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. [1] ஓலைச்சுவடி, கல்வெட்டுத் துறைகளில் ஈடுபாடு உடைய இவர் பொது மக்களின் நலனுக்காகப் புதிய கருத்தினைச் சொல்லும் நூலாசிரியர்களையும், நூல்களையும் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஆவார். [3] கல் சொல்லும் கதைகள் [4], பெரியாரின் புரட்சி முகங்கள் [5], குடந்தை என்.சேதுராமன் ஆய்வுக்கட்டுரைகள் [6] [7], சர்.பிட்டி.தியாகராயர் வாழ்வும் வாக்கும் [8] உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இறப்பு

இவர் 31 மே 2017 அன்று சென்னையில் இயற்கை எய்தினார். [1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.