வெள்ளை புல்வாய்

வெள்ளை இரலை என்பது சகாராப் பாலைவனப்பகுதியில் காணப்படும் ஒரு பெரிய இரலை மான் இனமாகும். இது அடாக்சு என்றும் திருகுகொம்பு இரலை என்றும் வழங்கப்படுகிறது. இவை முறுக்கிய நீளமாக கொம்புகளைக் கொண்டுள்ளன. பெண்ணில் கொம்பு 55 முதல் 80 செ.மீ வரையும் ஆணில் 95 முதல் 110 செ.மீ நீளம் வரையும் கொம்பு வளரும். இவற்றால் நீண்ட நாட்களுக்கு தண்ணீர் அருந்தாமல் இருக்கவியலும். பெண் இரலை ஆணை விட அளவில் சிறியதாக இருக்கும். இந்த இரலைகளின் தோல் நிறமானது பருவகாலத்தைப் பொறுத்து மாறக்கூடியது. கோடையில் வெண்ணிறமாகவும் குளிர்காலத்தில் இது பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

வெள்ளை இரலை (அடாக்சு)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Artiodactyla
குடும்பம்: Bovidae
துணைக்குடும்பம்: Hippotraginae
பேரினம்: Addax
Laurillard, 1841
இனம்: A. nasomaculatus
இருசொற் பெயரீடு
Addax nasomaculatus
(de Blainville, 1816)[2]
Distribution of addax
வேறு பெயர்கள்

இவை ஐந்து முதல் இருபது வரையிலான கூட்டமாக வாழும். வயதான பெண் இரலையே கூட்டத்தினை வழிநடத்தும். இவை மெதுவாக நகர்வதால் கொன்றுண்ணிகளாலும் மனிதர்களாலும் எளிதில் வேட்டையாடப்பட்டு விடுகின்றன. வறண்ட பகுதிகள், மிதமான பாலைநிலங்களே இவற்றில் இயல்பான வாழிடங்கள்.

இவை புற்களையும் பாலைநிலத்தில் உள்ள தாவரங்களின் இலைகளையும் உணவாகக் கொள்கின்றன.

மேற்கோள்கள்

  1. "Addax nasomaculatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).Database entry includes justification for why this species is listed as critically endangered and the criteria used.
  2. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14200937.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.