வெந்நீரூற்று
வெந்நீரூற்று என்பது புவியின் மேலோட்டில் உள்ள நிலத்தடிநீர் (groundwater), குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் புவிவெப்பத்தின் காரணமாகச் சூடேற்றப்பட்டு சுடுநீராக ஊற்றெடுக்கும்போது அந்த இடம் வெந்நீரூற்று என அழைக்கப்படுகின்றது. இந்த வெந்நீரூற்றுக்கள் வெவ்வேறு அளவான ஓட்டங்களைக் கொண்டிருக்கும். சில மிக மெதுவான ஓட்டத்தைக் கொண்ட ஊற்றுக்களாகவும், சில ஆறு போன்ற ஓட்டங்களைக் கொண்டனவாகவும் இருக்கும். சில வெந்நீரூற்றுக்களில் ஏற்படும் அமுக்கமானது பீறிடும் வெந்நீரூற்றுக்களை உருவாக்கக் கூடியளவு அதிகமாக இருக்கும்.

சூடான நீரில் திண்மப் பொருட்கள் இலகுவில் கரையக் கூடியனவாக இருப்பதனால், வெந்நீரூற்றுக்களில் அதிகளவில் கனிமங்கள் காணப்படும். இதனால் இந்த வெந்நீரூற்றுக்களில் உள்ள நீரில் பல மருத்துவ பயன்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில், இந்த இடங்கள் சுற்றுலாத் தலங்களாக இருப்பது மட்டுமல்லாமல், இயலாத்தன்மை உள்ளவர்களுக்கான உடலியக்க மருத்துவம் சார்ந்த சிகிச்சை அளிக்கும் நிலையங்களுக்கான இடங்களாகவும் அமைந்துள்ளன.[1][2]
இவற்றையும் பார்க்கவும்
- கன்னியா வெந்நீரூற்று
- பமுக்கலெ வெந்நீரூற்று