வெ. ஸ்ரீராம்

வெ. ஸ்ரீராம் (பிறப்பு - 1944), செவாலியே விருது பெற்ற தமிழக மொழிபெயர்ப்பாளர் ஆவார்.[1] ஈரோட்டில் பிறந்து கரூரில் பள்ளிப்படிப்பும் திருச்சியில் பட்டப்படிப்பும் முடித்தார். 1965 - 2001 காலத்தில் சென்னையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றார்.

பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு முக்கியமான சில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். பிரெஞ்சு திரையுலகம் தொடர்பான கட்டுரைகளை பல இதழ்களிலும் எழுதியுள்ளார். பிரெஞ்சு மொழி, பண்பாட்டு நட்புறவுக் கழகமான அலியன்ஸ் பிரான்சேயின் நிர்வாகக் குழுத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். பிரெஞ்சு இலக்கியம், பண்பாடு முதலானவற்றைத் தமிழ்நாட்டில் பரப்பும் பணியில் பல ஆண்டுகளாக இவர் அளித்துவரும் பங்கைப் பாராட்டி 2002 ஆம் ஆண்டு ஷெவாலியெ (Chevalier, Ordre des Palmes Académiques) விருதும், அதே ஆண்டில் ஷெவாலியெ (Chevalier, Ordre des Arts et des Lettres) விருதும் அளித்து இவரைச் சிறப்பித்தது.

மொழிபெயர்ப்புக்கள்

  • அந்நியன் (1980) (அல்பேர்ட் காம்யு - நாவல்)
  • குட்டி இளவரசன் (1981) (அந்த்வான்நத் செத்- எச்சுபெரி - நாவல்)
  • மீள முடியுமா (1986) (ழான்-போல் சார்த்ர் - நாடகம்)
  • சொற்கள் (2000) (ழாக் ப்ரெவெர்) - கவிதைகள்)
  • க்னோக் அல்லது மருத்துவத்தின் வெற்றி (2000) (ழூல் ரோமென்)
  • தொலைக்காட்சி : ஒரு கண்ணோட்டம் (2004) (பியர் பூர்தியு)
  • கீழை நாட்டுக் கதைகள் (2006) (மார்கெரித் யூர்ஸ்னார்)

குறுவெளியீடுகள்

  • பிரான்ஸ்வா த்ருஃபோ (1987)
  • ரோபெர் ப்ரேஸோன் (1998)
  • லூயி மால் (1999)

மேற்கோள்கள்

  1. த. ராஜன் (2019ஆகத்து 25). "மொழிபெயர்ப்பு என்பது மொழி, இலக்கியம், பண்பாடு கடந்த செயல்பாடு!- வெ.ஸ்ரீராம் பேட்டி". செவ்வி. இந்து தமிழ். பார்த்த நாள் 17 செப்டம்பர் 2019.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.