வீற்றிருக்கும் எருது

வீற்றிருக்கும் எருது (Sitting Bull, சிட்டிங் புல்) என்பது 19ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய புகழ்மிக்க அமெரிக்க-இந்தியத் தலைவரின் பெயர் ஆகும். இவர் சுமார் 1831இல் பிறந்தார். 1890, திசம்பர் 15ஆம் நாள் இறந்தார்.

வீற்றிருக்கும் எருது
Tȟatȟaŋka Iyotȟaŋka (born Hoka Psice)
1882ஆம் ஆண்டில்
தனிநபர் தகவல்
பிறப்பு c. 1831[1]
கிராண்ட் ஆறு, தெற்கு டகோட்டா
இறப்பு திசம்பர் 15, 1890(1890-12-15) (aged 59)
கிராண்ட் ஆறு, தெற்கு டகோட்டா, Standing Rock Indian Reservation
இறப்பிற்கான
காரணம்
சுட்டுக்கொல்லப்பட்டார்
அடக்க இடம் தெற்கு டகோட்டா
வாழ்க்கை துணைவர்(கள்) வெளிர் முடி
Four Robes
Snow-on-Her
Seen-by-her-Nation
சிவப்பு பெண்
பிள்ளைகள் ஒற்றை எருது (தத்து எடுக்கப்பட்ட மகன்)
காக்கை பாதம் (மகன்)
Many Horses (daughter)
Walks Looking (மகள்)
(தத்து எடுக்கப்பட்ட மகள்)
பெற்றோர் குதிக்கும் எருது (தந்தை)
Her-Holy-Door (mother)
சமயம் இலகோடா, உரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்
"வீற்றிருக்கும் எருது". ஆண்டு: 1885.

"வீற்றிருக்கும் எருது" என்னும் பெயர் அமெரிக்க-இந்திய மொழியாகிய லக்கோட்டாவில் Tȟatȟáŋka Íyotake என்று எழுதப்படும்.[2] அவருக்கு Slon-he ("மெதுவாகச் செல்பவர்") என்றொரு பட்டப்பெயரும் இருந்தது. அவர் அமெரிக்க-இந்திய இனமாகிய லக்கோட்டா சீயூ குலத்தின் கங்க்பாப்பா பிரிவைச் சார்ந்த சமய-அரசியல் பெருந்தலைவராகத் திகழ்ந்தார்.

வீற்றிருக்கும் எருது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் டக்கோட்டா மாகாணத்தில் பேராறு என்றழைக்கப்படும் பகுதியில் பிறந்தார். அவர் ஐக்கிய அமெரிக்க கொள்கைகளை எதிர்த்த "ஆவி நடனம்" (Ghost Dance) என்ற இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று பயந்து, அவரைக் கைதுசெய்யப் போனவிடத்தில், "அமெரிக்க-இந்திய காவல் துறை"யினர் அவரை "நிலைக்கல் இந்தியக் காப்பிடம்" என்னும் பகுதியில் சுட்டுக் கொன்றனர்.

துவக்க வாழ்க்கை

வீற்றிருக்கும் எருது

வீற்றிருக்கும் எருது டகோடா எல்லைக்குள் பிறந்தவராவார்.[3][4] 2007இல் வீற்றிருக்கும் எருதுவின் பெயரன் அவர்களின் குடும்பத்தில் செவிவழிச்செய்தியாக வீற்றிருக்கும் எருது யெல்லோ ஸ்டோன் ஆறுக்கருகே பிறந்தார் என்றார்.[5] He was named Jumping Badger at birth.[6] இவரின் குல மரபுப்படி இவரின் தந்தையின் பெயர்களுல் ஒன்றான வீற்றிருக்கும் எருது என்னும் பொருள்படும் Tȟatȟaŋka Iyotȟaŋka என்னும் பெயர் அளிக்கப்பட்டது.

1862ஆம் ஆண்டு நடைபெற்ற டகோடா போரில் இவரின் குலத்தினர் பங்கேற்கவில்லை. ஆயினும் இப்போரில் கிழக்கு டகோடாவில் இருந்த பல பழங்குடியினர்களும் மைய தெற்கு மினசோட்டாவில் இருந்த போர்வீரர்களுமாக மொத்தம் 300 முதல் 800 வரை கொல்லப்பட்டிருக்கலாம். இப்போரானது அரசு பழங்குடியினரை நடத்தும் விதத்திற்கு எதிராகவும் அவ்விடத்தை விட்டு வெள்ளையர்களை ஓட்டும் முயற்சியாகவும் இருந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போர் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையுடனும் போரில் இருந்ததோதும் அமெரிக்க அரசு 1863இலும் 1864இலும் இப்போரில் ஈடுபடா இனக்குழுக்களின் மீதும் கூட அமெரிக்க அரசு பதில் தாக்குதல் நடத்தியது.[7]

1864இல், தலபதி ஆல்ஃபிரட் சுல்லியின் 2200 வீரர்களைக்கொண்ட இரண்டு படை பிரிவுகள் இவரின் கிராமத்தை தாக்கினர். இப்படையினருக்கு எதிராக வீற்றிருக்கும் எருது, கால் மற்றும் இன்காபுதுத்தா ஆகியோர் இருந்தனர். இவர்கள் இப்போரில் தோற்கடிக்கப்படு அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் ஆகஸ்ட் வரை பாடைப்பிரிவினர் அங்கேயே தொடர்ந்தது நிலைகொண்டிருந்தனர். செப்டம்பர் மாதத்தில், வீற்றிருக்கும் எருது 100 அன்குபாபா பழங்குடியினரோடு இப்போது மார்மத், வடக்கு டகோடா அருகே தலபதி ஜேம்ஸ் ஃபிஸ்கை எதிர்கொன்டார். இப்போரின்போது வீற்றிருக்கும் எருது சுடப்பட்டாலும் உயிர்தப்பினார். அவரின் இடுப்பில் குண்டடிப்பட்டது.[8]

சமயம் மாற்றம்

1883இல் இவர் கத்தோலிக்கராக திருமுழுக்கு பெற்றார் என செய்திகள் பரவின. ஆயினும் அவ்விடத்தில் இருந்த ஜேம்ஸ் மெக்லாக்லின் என்னும் இந்திய இடைத்தரகர் இதனை வதந்தி மறுத்துள்ளார்.[9][10][11] ஆயினும் 1883க்குப்பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வீற்றிருக்கும் எருது கழுத்தில் கத்தோலிக்க சிலுவையுடன் காட்சியளிக்கின்றார். இயேசுவின் உடலோடு வடிவமைக்கப்பட்டிருக்கும் இத்தகைய சிலுவைகளை கத்தோலிக்கரும் மரபுவழித்திருச்சபையினரும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மேலும் மரபு வழி சபைகள் அமெரிக்காவில் அன்நாட்களில் கால்பதிக்கவில்லை என்பது குறிக்கத்தக்கது.

இறப்பும் அடக்கமும்

வீற்றிருக்கும் எருதுவின் கல்லறையில் இருக்கும் நினைவுத்தூன்

1890ஆம் ஆண்டு ஜேம்ஸ் மெக்லாகின் லகோடா தலைவரை கைது செய்ய எண்ணினார். பேய் நடனம் இயக்கதினரோடு அவர் சேரப்போகின்றார் என அஞ்சியதே இதற்கு காரணம். முன் கூட்டி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி டிசம்பர் 15ஆம் நாள் காலை ஐந்து மணியளவில் வீற்றிருக்கும் எருதுவின் வீட்டினை உடைத்து அவரையும் புல்ஹெடையும் கைது செய்தனர்.[12] இதனால் அவர்களின் குழுவினரோடு நடந்த சில நிமிட சண்டையில் 6 காவலாளிகள் உட்பட பலர் இறந்தனர். வீற்றிருக்கும் எருது தலையினும் மார்பிலும் சுடப்பட்டு இறந்தார். மதியம் 12 முதல் 1க்குல் இவர் இறந்திருக்கக்கூடும்.[13] இவரின் உடல் ஃபோர்ட் ஏட்சுவில் இரானுவத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது[14] 1953இல் இவரின் குடும்பத்தினர் இவரின் உடலை இவரின் பிறந்த ஊரில் அடக்கம் செய்தனர்.[15][16]

ஆதாரங்கள்

  1. Encyclopædia Britannica. 20. 1955. பக். 723.
  2. New Lakota Dictionary, 2008
  3. "PBS: The West: Sitting Bull".
  4. Utley, Robert (2008). Sitting Bull: The Life and Times of an American Patriot. Holt Paperbacks. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0805088304.
  5. Blumberg, Jess (2007-10-31). ""Sitting Bull's Legacy"". Smithsonian. Retrieved 2011-10-04. Cite magazine requires |magazine= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. United States History: Sitting Bull.
  7. "The US Army and the Sioux". National Park Service. பார்த்த நாள் பெப்ரவரி 19, 2011.
  8. Vestal, Stanley (1989). Sitting Bull, Champion of the Sioux: A Biography. University of Oklahoma Press. பக். 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8061-2219-6. http://books.google.ca/books?id=QvrzJJcUNsUC&pg=PA64&lpg=PA64&dq=Sitting+Bull+1864#v=onepage&q=Sitting%20Bull%201864&f=false. பார்த்த நாள்: பெப்ரவரி 19, 2011.
  9. Whittaker, A Complete Life of General Custer, Volume 2, p. 535.
  10. "Sitting Bull becomes a Catholic". New York Times (1883-04-13). பார்த்த நாள் 2011-04-11.
  11. Chicago Daily Tribune, மே 26, 1883, 8.
  12. Utley, Robert M. (2004). "The Last Days of the Sioux Nation, 2nd Edition". Yale University Press. p. 158.
  13. Dippie, Brian W. The Vanishing American: White Attitudes and U.S. Indian Policy. Middleton, Conn.: Wesleyan University Press, 1982.
  14. Snider, G.L., A Maker of Shavings, the life of Edward Forte, formerly 1st Sergeant, troop "D", 7th Cavalry 1936.
  15. "Bones of Sitting Bull Go South From One Dakota to the Other.". அசோசியேட்டட் பிரெசு in த நியூயார்க் டைம்ஸ். ஏப்ரல் 9, 1953. http://select.nytimes.com/gst/abstract.html?res=FA0D15F63E55107B93CBA9178FD85F478585F9. பார்த்த நாள்: 2008-05-29.
  16. Barry, Dan (ஜனவரி 28, 2007). "Restoring Dignity to Sitting Bull, Wherever He Is". த நியூயார்க் டைம்ஸ். http://select.nytimes.com/2007/01/28/us/28thisland.html. பார்த்த நாள்: 2008-05-29.
"வீற்றிருக்கும் எருது" ஐக்கிய அமெரிக்க படையை எதிர்த்துப் போரிட்ட "சிறு பெருங்கொம்பு" போர்த்தளம்
வீற்றிருக்கும் எருதுவின் கல்லறை நினைவுச் சின்னம். இடம்: மோபிரிட்சு, தெற்கு டக்கோட்டா. ஆண்டு: 2003.

படத்தொகுப்பு

    உசாத்துணை

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.