விவசாயத் தகவல் ஊடகம்

விவசாயத் தகவல் ஊடகம் என்பது இணையம் வழியாகப் பகிர்ந்து கொள்ளும் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணைய தளமாக செயல்பட்டு வருகிறது.

விவசாயத் தகவல் ஊடகம்
வெளியீட்டாளர் கிராமம் கல்வி மற்றும் வேளாண்
முன்னேற்ற சமூக ஊடகம்
இதழாசிரியர் சக்திவேல்
வகை வேளாண்மைஇணைய இதழ்
வெளியீட்டு சுழற்சி
முதல் இதழ் 16-01-2010
நிறுவனம் கிராமம் கல்வி மற்றும் வேளாண்
முன்னேற்ற சமூக ஊடகம்
நகரம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி கிராமம் கல்வி மற்றும் வேளாண்
முன்னேற்ற சமூக ஊடகம்
ஈரோடு
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம் விவாசாயத் தகவல் ஊடகம் இணைய இதழ்

தகவல் பகிர்வுக் களம்

வேளாண்மை சார்ந்த தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்,விவசாயம் சார்ந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விடை அளித்தல், விவசாயம் குறித்த கருத்துப் பகிர்வு, விவசாயப் பொருட்கள் வாங்க விற்க உதவிகள், விவசாயச் செய்திகள், தொழில் நுட்பங்கள், சந்தை நிலவரம், விவசாய நிகழ்வுகள் குறித்த விபரங்கள் என முற்றிலும் விவசாயம் சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு களமாக இந்த இதழ் உள்ளது.

சேவைத் தொடக்கம்

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விவசாய தகவல் ஊடக இணைய தளம் தனது முன்னோட்டத்தினை செயல்படுத்தத் துவங்கியது. 2010 ம் ஆண்டு ஜனவரி 16 முதல் தனது அதிகாரப் பூர்வ சேவையினை துவக்கியது. விவசாய தகவல் ஊடகம் எந்த வித இலாப நோக்கமும் இன்றி செயல்படும் கிராம கல்வி மற்றும் வேளாண் வளர்ச்சி தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து உலக விவசாயி , ஹல்லோ அக்ரி போன்ற விவசாயிகளுக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இலவசச் சேவை

விவசாயிகள் குறித்து கணக்கீடு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான செயல்பாடுகளில் முனைப்பு காட்டி வரும் இந்தத் தளம், விவசாயிகளின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் நோக்கத்துடன் இலவசச் சேவைகளை அளிக்கிறது. குறிப்பாக, விவசாயிகள் மற்றும் விறபனையாளர்களுக்கான வணிகத் தொடர்பினை அமைத்து தருதல், வேளாண் பட்டதாரிகள் உதவியுடன் தொலைபேசி வழியான தகவல் அளிப்பு உட்பட பல தொலைபேசி வழி சேவைகளை இலவசமாக அளித்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கான நேரடிக் கள உதவிக்கு என ஊராட்சி ஒன்றியம் வாரியாக ஒரு தனிக்குழு அமைத்து விவசாயிகளுக்கும், வேளாண்மைத் தொழில் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் உதவிட முனைந்து வருகிறது,

குறுந்தகவல்

எஸ் எம் எஸ் எனப்படும் குறுந்தகவல் மூலமாக விவசாயிகள் கேட்கும் தகவல்கள் குறித்த மாற்றங்கள் நிகழ்வுகளை அனுப்பும் சேவையும் இங்கே கிடைக்கிறது

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.