விளிம்படி வெடிபொதி

விளிம்படி வெடிபொதி என்பது, சுடுகலனின் உலோக வெடிபொதிகளை எரியூட்டும் வழிமுறை ஆகும். இவ்வகை வெடிபொதிகளை, "விளிம்படி" என்றும் சுருக்கமாக அழைப்பர். எரியூட்டியை பற்றவைப்பதற்காக, (வெடிபொதியின்) அடித்தட்டின் விளிம்பானது, துப்பாக்கியின் வெடியூசியால் அடித்து நொறுக்கப்படுவதால், இது விளிம்படி என்று அழைக்கப்படுகிறது. இது மிக பொதுவான நடுவடி (எனப்படும், அடித்தட்டின் நடுவிலுள்ள எரியூட்டிச் சிமிழை வெடியூசியால் அடிக்கும்) முறைக்கு மாறானது. விளிம்படி வெடிபொதியின் விளிம்பு என்பது, எரியூட்டிச் சேர்மத்தை கொண்டுள்ள தட்டும்-மூடி ஆகும், வெடிபொதியுள் உந்துபொருட்களும், எறியமும் (தோட்டா) இருக்கும். ஒருமுறை (வெடிபொதியின்) விளிம்பு அடிக்கப்பட்டு தோட்டா சுடப்பட்டபின், மறுமுறை அதில் மீள்குண்டேற்றம் செய்ய இயலாது, ஏனெனில் வெடியூசியின் முதல் தாக்கத்திலேயே விளிம்பு நெளிந்துவிடும். 

விளிம்படி வெடிபொதிகள் இடமிருந்து வலமாக, .22 ஷார்ட், .22 லாங் ரைஃபிள், .22 டபள்யூ.எம்.ஆர்., .17 எச்.எம்.2, .17 எச்.எம்.ஆர்
நடுவடி மற்றும் விளிம்படி வெடிபொதிப் பற்றவைப்பின் எரியூட்டலின் ஒப்பீடு.

பண்புகள்

விளிம்படி வெடிபொதியின் உரு.
சுட்ட விளிம்படி (இடது) மற்றும் சுட்ட நடுவடி (வலது) வெடிபொதிகள். ஒர் விளிம்படி வெடியூசி, வெடியுறையின் விளிம்பில் ஒரு பொளியை உண்டாக்கும்; ஆனால் ஓர் நடுவடி வெடியூசி எரியூட்டியின் நடுவே ஒரு குழியை உண்டாக்கும். படத்தில் இதை கவனிக்கவும்.

விளிம்படி வெடிபொதிகளுக்கு குறைவான அழுத்தமே போதுமானது; ஏனெனில் வெடியூசி அதன் விளிம்பை அடித்து நொறுக்கி, எரியூட்டியை பற்றவைக்க ஏற்றவாறு, மெல்லிய வெடியுறையை தான் இவை கொண்டிருக்கும். வெடிப்பொடியை உந்துபொருளாக பயன்படுத்திய காலத்தில், .44 கேலிபர் முதல் .56 கேலிபர் வரையிலான விளிம்படி வெடிபொதிகள் பிரபலமானவை. நவீன விளிம்படி வெடிபொதிகளில் புகையற்ற பொடியை பிரயோகிப்பதால் அதிக அழுத்தங்கள் உண்டாகும், இதனால் இவற்றின் அளவு .22 கேலிபர் (5.5 மி.மீ) அல்லது அதற்கும்கீழாக தான் இருக்கிறது.[1] விளிம்படி வடிவத்திற்கு குறைவழுத்தங்கள் தான் தேவை என்பதால்; விளிம்படி சுடுகலன்கள் எடைகுறைந்தும், விலைமலிவாகவும் விளங்கின. இதுவே சிறு-கேலிபர் வெடிபொதிகளின் தொடர்ச்சியான மவுசுக்குக் காரணம்.

(ஈய) குண்டுபொதி

சில விளிம்படி வெடிபொதிகள், சிறிதளவு #11 அல்லது #12 குண்டுகளுடன் இருக்கும். இந்த "எலி-குண்டு" நெருங்கிய வீச்செல்லைகளில் ஓரளவுக்கு தான் சிறந்தது, மேலும் இதை எலிகள் அல்லது இதர சிறு விலங்குகளை சுடுவதற்கு தான் பொதுவாக பயன்படுத்தப்படும். கூரைத்தளம் மற்றும் சுவர்களை இது ஊடுருவாது என்பதால், கிடங்குகளில் இருக்கும் பறவைகளை சுடவும் இதை பயன்படுத்துவர்.

மேலும் பார்க்க 

மேற்கோள்கள்

  1. Bussard, Michael (2010 )"The Impossible .22 Rimfire", American Rifleman
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.