வில்லெல்மா


வில்லெல்மா அல்லது வில்ஹெல்மா என்பது ஒரு ஒருங்கிணைந்த தாவரவியல் மற்றும் விலங்குகள் காட்சியகமாகும். இது இடாய்ச்சுலாந்து நாட்டின் பாடன் வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தின் தலைநகரான இசுடுட்கார்ட்டு நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் பரப்பளவு 3I0 எக்டேர். அரச மாளிகையாகக் கட்டப்பட்ட இது பின்னர் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டது. பின்னர் விலங்குகள் காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டது.

வில்லெல்மா
திறக்கப்பட்ட தேதி1919 (as a botanical garden)[1]
1951 (first animal exhibit)[2]
இடம்இசுடுட்கார்ட்டு, பாடன்-வுயர்ட்டம்பெர்கு, செர்மனி
பரப்பளவு30 ha (74 ஏக்கர்கள்)[1]
அமைவு48°48′19″N 9°12′11″E
விலங்குகளின் எண்ணிக்கை>8,000
உயிரினங்களின் எண்ணிக்கை>1,000
வருடாந்திர வருனர் எண்ணிக்கை2.1 மில்லியன் (2006)[3]
இணையத்தளம்www.wilhelma.de/nc/en/home.html
வில்லெல்மாவில் உள்ள பெரிய பசுங்குடில்

ஐரோப்பாவில் தாவரவியல் பூங்காவும் விலங்குகள் காட்சியகமும் ஒன்றாக உள்ள ஒரே பெரிய காட்சியகம் இதுவே. இங்கு ஆயிரத்திற்கும் மேலான சிற்றினங்களை உள்ளடக்கிய 8000-க்கும் மேற்பட்ட விலங்குகளும் 5000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளும் உள்ளன.

குறிப்பிடத்தக்கவை

  • அமேசான் குடில் - இக்குடில் அமேசான் காட்டின் சூழலை ஒத்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் டூக்கான் பறவை, தாவரங்கள், மீன்கள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • பூச்சிகள் காட்சியகம் - இங்கு வண்ணத்துப் பூச்சி உள்ளிட்ட பலவகையான பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பூச்சிகளின் உடலுறுப்புகளை விளக்க மாதிரிப் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.
  • மனிதக் குரங்குக் குடில் - இங்கு கொரில்லா, போனபோ, ஒராங்குட்டான் முதலிய விலங்குகள் (குடும்பமாக) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • மீன்கள் காட்சியகம்
  • ஊர்வன காட்சியகம்
  • பறவைகள் காட்சியகம்
  • செக்கோயா மரங்கள்
  • மொரிசியசு குடில் - இங்கு கள்ளி உள்ளிட்ட பல வகையான தாவரங்கள் உள்ளன.
  • இரவாடிகள் குடில் - இரவில் வாழும் விலங்குகளான வவ்வால்கள் முதலியன உள்ளன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.