விமென்டின்

விமென்டின் அல்லது வைமென்டின் (Vimentin) என்பது இடைநுழைத் திசுச்செல்களில் காணப்படும் மூன்றாம் வகை (type III) இடைப்பட்ட கசையிழைப் (intermediate filament) புரதம் ஆகும். இத்தகு இடைப்பட்ட கசையிழைப் புரதங்கள் (பலசெல் விலங்கு) கடைக்கலவுரு செல்கள் (metazoan cells)[1] மற்றும் பாக்டீரியாக்களில் காணப்படுகின்றன[2]. இடைப்பட்ட கசையிழைப் புரதங்கள் டிபியூலின் நுண்புன்குழாய்கள், அக்தின் நுண்ணிழைகள் ஆகியவை குழிய வன்கூட்டின் பகுதிகளாக உள்ளன. இவ்வகைப் புரதங்கள் வளர்ச்சிசார்-ஒழுங்கமைவின்படி வெளிபடுத்தப்படுகின்றன. இடைநுழைத் திசுச்செல்களில் உள்ள குழிய வன்கூடுகளில் விமென்டின் முதன்மையாகக் காணப்படுகிறது.

விமென்டின் புரதக்கட்டமைப்பு
விமென்டின் எதிர்ப்பான்களைக் கொண்டு நிறமிடப்பட்ட (HEp-20-10) செல்கள்

விமென்டின் சதைப்புற்று நோய் உள்ளவர்களில் இடைநுழைத்திசுவைக் கண்டறியும் கழலைக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது[3][4].

மேற்கோள்கள்

  1. Eriksson JE, Dechat T, Grin B, Helfand B, Mendez M, Pallari HM, Goldman RD (2009). "Introducing intermediate filaments: from discovery to disease". J Clin Invest 119 (7): 1763–71. doi:10.1172/JCI38339. பப்மெட்:19587451.
  2. Cabeen MT, Jacobs-Wagner C (2010). "The bacterial cytoskeleton". Annu Rev Genet 44: 365–92. doi:10.1146/annurev-genet-102108-134845. பப்மெட்:21047262.
  3. Leader M, Collins M, Patel J, Henry K (January 1987). "Vimentin: an evaluation of its role as a tumour marker". Histopathology 11 (1): 63–72. doi:10.1111/j.1365-2559.1987.tb02609.x. பப்மெட்:2435649.
  4. "Immunohistochemistry from the Washington Animal Disease Diagnostic laboratory (WADDL)of the College of Veterinary Medicine, Washington State University". பார்த்த நாள் 2009-03-14.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.