விண்டோஸ் லைவ் மெயில்

விண்டோஸ் லைவ் மெயில் ஆனது மைக்ரோசாப்ட்டின் இணையமூடான மின்னஞ்சல் சேவையாகும். இதன் வெள்ளோட்டப் பதிப்பானது 1ஆம் திகதி நவம்பர் 2005 இல் இலிருந்து விண்டோஸ் லைவ் உடன் வெளியிடப்பட்டது. இது முன்னர் ககூனா (Kahuna) என இரகசியப் பெயரிடப்பட்ட விண்டோஸ் லைவ் மெயில் முழுமையாக வளர்ச்சியடைந்ததும் ஹொட்மெயிலை மாற்றீடுசெய்யும். இது 2 ஜிகாபைட் அளவு சேமிக்கும் இடம், தானாகவே எழுத்துப் பிழை பார்த்தல், மின்னஞ்சல்களைத் தானகவே பிரித்தல், மற்றும் பல பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகும்.

பொதுவாக விண்டோஸ் லைவ் இணையத்தளத்தினூடாகவோ அல்லது விண்டோஸ் லைவ் மெயிலைச் சோத்தித்துக் கொண்டிருக்கும் பயனரின் அழைப்பினூடாகவோ இதைப் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாகவே விண்டோஸ் லைவ் இணையமூடாகப் பதிவதன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்டோஸ் லைவ் மெயில் 1996 ஆம ஆண்டில் சபீர் பாத்தியா மற்றும் ஜக் ஸ்மித்தால் ஆரம்பிக்கப் பட்ட , ஹொட்மெயிலின் வழிவந்த ஓர் உலாவியூடான மின்னஞ்சல் சேவையாகும். இச்சேவையை மைக்ரோசாப்ட் 1997 ஆம் ஆண்டில் வாங்கிக் கொண்டது. 1999 இல் 30 மில்லியன் பயனர்கள் இருந்தனர். 2004 ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்தினர் தமது சொந்த மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையை ஆரம்பித்தனர். ஜிமெயிலில் 2.7 ஜிகாபைற்றிற்கும் மேற்பட்ட சேமிக்கும் வசதி, இலகுவான பயனர் இடைமுகம் ஆகியன இணையமூடான மின்னஞ்சலில் மாற்றங்களை ஏற்படுத்தின. விண்டோஸ் லைவ் மெயிலானது ஜிமெயில், யாகூமெயில் ஆகியவற்றிற்கான ஓர் விடையாகும்.

வசதிகள்

மின்னஞ்சல் முகவரிகளைத் தானாக நிரப்புதல்

மின்னஞ்சலை எழுதும்போது பெறுபவரின் முதலெழுத்தைத் தட்டச்சுச் செய்ததும் அவ்வெழுத்தில் ஆரம்பிக்கும் மின்னஞ்சல் முகவரிகள் யாவும் பட்டியலிடப்படும்

படங்களிற்கான முன்னோட்டம்

விண்டோஸ் லைவ் மெயிலானது பெரிய பட இணைப்புக்களைத் தானகவே முன்னோட்ட்டத்திற்கு மாற்றிவிடும். ஒர் கிளிக்கின் மூலம் முழுப் படத்தையும் பார்வையிடலாம்.

விசைப்பலகைக் குறுக்குவழிகள்

விண்டோஸ் லைவ் மெயிலானது மவுஸ் மாத்திரம் அன்றி விசைப்பலகைக் குறுக்கு வழிகளையும் ஏற்கின்றது.

வேகம்

வின்டோஸ் லைவ் மெயிலானது AJAX தொழில் நுட்பத்தால் வேகமாக இயங்க வல்லது.

தட்டச்சு செய்யும் போதே பிழைதிருத்தம்

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்புக்களில் உள்ளதைப்போன்று இங்கும் தட்டச்சு செய்யும்போதே பிழைதிருத்தும் வசதியுள்ளது. எழுத்துப் பிழையுள்ள சொற்கள் இங்கும் சிவப்புப் கோடிட்டுக்க் காட்டப் படும் அச்சொல்லின் மேல் Right click செய்யும் போது பொருத்தமான் வேறு சொற்களைக் காட்டும். தற்போது பிழைதிருத்தும் வசதியானது ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன், இத்தலிய மொழிகள் மாத்திரமேயுள்ள போதிலும் ஏனைய மொழிகள் பின்னர் சேர்த்துக் கொள்ளப்டும்.

சேமிக்கும் அளவு

விண்டோஸ் லைவ் மெயிலானது 2 ஜிகாபைற் அளவான இடவசதியை அளிக்கின்றது. மின்னஞ்சலானது 2 ஜிகாபைற் அளவை அண்மிக்கும் போது 50 மெகாபைற் அளவு குறைவானபோது ஓர் மின்னஞ்சலானது அநுப்படும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.