யாகூ! மின்னஞ்சல்
யாஹூ! மெயில் யாஹூ! இனால் 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இணையமூடான மின்னஞ்சல் சேவையாகும். யாஹூ! மெயிலில் 260 மில்லியன் பதிவுசெய்த பயனர் கணக்குகள் உண்டு .இன்று உலகின் மிகப் பெரும் மின்னஞ்சல் வழங்குபவராவார்.[1] யாஹூ! மெயிலின் இன் பிரதான போட்டியாளராக ஜிமெயில், ஹொட்மெயில், ஏஐஎம் மெயில் ஆகியவை விளங்குகின்றன.
![]() | |
![]() இலவச யாஹூ! மெயில் அஞ்சற்பெட்டியின் பார்வை. | |
உரலி | யாஹூ! மெயில் |
---|---|
தளத்தின் வகை | மின்னஞ்சல், இணைய மின்னஞ்சல் |
உரிமையாளர் | யாஹூ! |
உருவாக்கியவர் | யாஹூ! |
வெளியீடு | 8 அக்டோபர்1997 |
தற்போதைய நிலை | சோதனைக் காலம் முடிவுற்றுள்ளது. |
26 ஆகஸ்ட் 2007 இன்படி ஏஜாக்ஸ் இடைமுகத்திலான யாஹூ! முழுமையடைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது இவ்வசதியானது இச்சேவையானது எல்லாப் பயனர்களுக்குமே வழங்கப்பட்டு வருகின்றது. இதன் தற்போதைய இடைமுகம் ஜூலை 2004 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன் இடைமுகமானது இன்டநெட் எக்ஸ்புளோளர் 7, பயர்பாக்ஸ் மற்றும் கமினோ (எல்லா ஜிக்கோ இலான் உலாவிகள்) உலாவிகளுடன் ஒத்திசைவு. யாஹூ!வின் திட்டப்படி எல்லாச் சேவைகளையுமே இறுதியில் ஃபயர்பாக்ஸ் உலாவிக்கு ஒத்திசைவாகச் செய்வதாகும்.[2]). இதன் இடைமுகத்தை ஒபேரா மற்றும் கான்குவர் உலாவிகளூடாகவும் அணுகமுடியும் எனினும் அவற்றில் இடைமுகத்தில் சிறுசிறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
வரலாறு
யாஹூ! மெயிலின் வரலாறு ஜேஜே ஹேலி உடன் ஆரம்பமாகின்றது. இவர் யாஹூ! இன் ஒவ்வொரு உள்வாங்கலிலும் சம்பந்தப்பட்டுள்ளார். "உங்களுக்காக உழைப்பவர்களே உங்களின் வணிகத்தை" சரியாக அறிவார்கள் என இவர் கூறினார். இவரைப் பொறுத்தவரையில் எப்பொழுதுமே மூன்று பிரதான கேள்விகளே இவரிடம் இருக்கும் அவையானது "விருத்தி செய்வதா, வாங்குவதா அல்லது குத்தகைக்கு எடுப்பதா?" இதற்கான விடையானது அதன் போட்டியாளர்களைப் பொறுத்தும் நிறுவனத்தின் நிலையைப் பொறுத்தும் அமையும்.
வசதிகள்
இலவச சேவையில்
- அளவற்ற மின்னஞ்சற் சேமிப்பு அளவு
- 10 மெகாபிட்டுகள் இணைப்புக்களைச் மின்னஞ்சலில் சேமிக்கும் வசதி.
- எரிதங்கள் (Spam) மற்றும் கணினி நச்சுநிரல்களுக்கு(Virus) எதிரான பாதுகாப்பு
- ஏனைய மின்னஞ்சலில் இருந்து POP3 முறையில் மின்னஞ்சலைப் பெறும் வசதி
- 4 மாதங்களாகப் புகுபதிகை செய்யதாத பயனர்களின் மின்னஞ்சல் கணக்குகள் அழிக்கப்படும்.
கட்டணம் செலுத்திய பிளஸ் பதிப்பு
குறிப்பு: இலவச சேவையிலும் POP3 முறையில் அனுமதிக்கின்றார்களெனினும் இச்சேவை எல்லாருக்குமா என்பது தெளிவான விளக்கம் இல்லை.
- அளவற்ற மின்னஞ்சற் சேமிக்கும் அளவு.
- 20 MB இணைப்புக்களைச் மின்னஞ்சலில் சேமிக்கும் வசதி.
- POP3 முறையில் மின்னஞ்சலைப் பெறுதல். இதன் மூலமாக மைக்ரோசாப்ட் அவுட்லுக், யூடோரா போன்றவற்றூடாகவும் மின்னஞ்சலைப் பெறும் வசதி.
- குப்பை அஞ்சல் மற்றும் கணினி வைரஸ்களிற்கு எதிரான பாதுகாப்பு
- ஏனைய மின்னஞ்சலில் இருந்து POP3 முறையில் மின்னஞ்சலைப் பெறும் வசதி
- ஆண்டிற்கு 19.9 அமெரிக்க டாலர்களைச் செலுத்தவேண்டும்
உள்ளிணைந்த உரையாடல் வசதி
யாஹூ!மெயில் தனது பிந்தைய பதிப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளிணைந்த உரையாடல் வசதியை வழங்கியுள்ளது. இதனால் யாஹூ! மெசன்ஜர் இல்லாமலே யாஹூ!மெசஞ்சர் மற்றும் வின்டோசு லைவ் மெசஞ்சர் பயனர்கள் உரையாடக் கூடியதாக இருக்கும். எனினும் இச்சேவையைப் பயன்படுத்துவதற்கு அடோபி பிளாஷ் மென்பொருள் உலாவியில் இருக்கவேண்டும். இது ஜிமெயில் சேவைக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதெனினும் ஜிமெயிலின் உள்ளிணைந்த உரையாடலுக்கு அடோபி பிளாஷ் மென்பொருள் அவசியம் இல்லை.
இவற்றையும் பார்க்க
உசாத்துணைகள்
- உலகின் மிகப்பெரும் மின்னஞ்சல் சேவையை வழங்குபவர் யார்? அணுகப்பட்டது 19 ஆகஸ்ட், 2007 (ஆங்கில மொழியில்)
- Kotadia, Munir (March 17 2005). "Yahoo pledges full Firefox compatibility". Archived from the original on 2012-07-17. http://archive.is/SJM3.