வினைவேக மாறிலி

வேதி வினைவேகவியலில் வினைவேக மாறிலி (Reaction rate constant) அல்லது வினைவேகக் கெழு (Reaction rate coefficient), k, என்பது வேதிவினையின் வேகத்தைக் குறிக்கும் ஒரு மாறிலியாகும்.[1]

A, B என்னும் இரண்டு வினைபடுபொருள்கள் வேதிவினையின் காரணமாய் C என்னும் வினைவிளைபொருளை விளைவிக்கிறது என்றால்,

a A + b B → c C

வினைவேகத்தைப் பின்வரும் சமன்பாட்டின் மூலம் குறிக்கலாம்.

இங்கே k(T) என்பது வினைவேக மாறிலியாகும். அது வெப்பநிலையைப் பொறுத்து மாறும் இயல்புடையதாகும். [A] மற்றும் [B] வினைபடுபொருள்களின் செறிவைக் குறிக்கும். m,n என்பவை பரிசோதனையின் வழியாகக் கண்டறியலாம்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.