வினைவேகச் சமன்பாடு

ஒரு வேதிவினையின் வினைவேகச் சமன்பாடு (Rate equation) அல்லது வினைவேக விதி (Rate law) என்பது வினைவேகத்தையும் வினைபடுபொருள்களின் செறிவையும் (அல்லது அழுத்தத்தையும்) இணைக்கும் ஒரு சமன்பாடு ஆகும். இச்சமன்பாட்டில் வினைவேகக் கெழு என்னும் மாறிலிகளும் இருக்கும்.[1]

பல வகையான வேதிவினைகளுக்கும் வினைவேகச் சமன்பாட்டை அடுக்கு விதி கொண்டு குறிக்கலாம்.

இதில் [A] என்பதும் [B] என்பதும் முறையே அப்பொருள்களின் செறிவைக் குறிக்கும். (மோல் லிட்டர்−1)

x, y என்பவை பரிசோதனையின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. k என்பது வினைவேக மாறிலியாகும். இதன் மதிப்பு வெப்பநிலை, பரப்பு, அயனிய ஆற்றல், ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

மேற்கோள்கள்

  1. IUPAC Gold Book definition of rate law. See also: According to IUPAC Compendium of Chemical Terminology.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.