வினிசியசு டி மோரேசு
மார்க்கசு வினிசியசு டா குரூசு இ மெல்லோ மோரேசு(Marcus Vinicius da Cruz e Mello Moraes [1], அக்டோபர் 19, 1913 – சூலை 9, 1980), பரவலாக வினிசியசு டி மோரேசு[2] (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [viˈnisjus dʒi ˈmoɾajs]) பிரேசிலிய கவிஞரும், பாடலாசிரியரும், கட்டுரையாளரும் நாடகாசிரியரும் ஆவார். இவர் ஓ பொயட்டினா ("சிறு கவிஞர்") என்ற புனைபெயரில் தற்போது செவ்வியல் பாடல்களாக கருதப்படும் பல பாடல்களை எழுதியுள்ளார். பிரேசிலிய இசையின் முன்னோடி எனக் கருதப்படும் இவர் பல நாடகங்களையும் எழுதியுள்ளார். தேசிய தூதராகவும் பணியாற்றியுள்ளார். தனது பாணியில் போசா நோவா என்ன்ற இசைவடிவத்தை அமைத்துள்ளார். இவர் இரியோ டி செனீரோவில் லிடியா குரூசு டி மோரேசுக்கும் குளோடோல்டோ பெரைரா டா சில்வா மோரேசிற்கும் மகனாகப் பிறந்தார்.
வினிசியசு டி மொரேசு | |
---|---|
![]() பாரிசில் வினிசியசு டி மோரேசு, 1970. | |
புனைப்பெயர் | "ஓ பொயட்டினா" |
தொழில் |
|
நாடு | பிரேசிலியர் |
கல்வி நிலையம் | இரியோ டி செனீரோ மாநிலப் பல்கலைக்கழகம் |
இயக்கம் | நவீனவியம் |
மேற்சான்றுகள்
- http://www.releituras.com/viniciusm_bio.asp
- தற்போதைய சீர்திருத்தப்பட்ட போர்த்துக்கேய நெடுங்கணக்கின்படி இந்தப் பெயர் வினிசியசு டி மோரைசு என்று உச்சரிக்கப்படும்.
வெளி இணைப்புகள்
- International Jose Guillermo Carrillo Foundation
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் வினிசியசு டி மோரேசு
- (போர்த்துக்கேயம்) Official site
- (பிரெஞ்சு) (ஆங்கிலம்) History of BOSSA NOVA with audio & video samples by ABDB.
- Vinícius de Moraes (documentário)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.