விண் தூக்கி
விண் தூக்கி அல்லது விண்வெளித் தூக்கி (Space elevator) எனப்படுவது புவியில் இருந்து விண்வெளிக்கு ஆட்களையும் பொருட்களையும் எடுத்துச் செல்லும் வண்ணம் திட்டமிடப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்பு ஆகும்.[1] அதாவது புவியில் மாடிகளுக்கு செல்லும் உயர்த்தி போன்று புவிக்கும் விண்வெளிக்கும் செல்லும் உயர்த்தி விண் தூக்கி ஆகும். இந்த கருத்துரு கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி என்பவரால் முதலில் முன்வைக்கப்பட்டது.[2]

நியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையில் இவ்வாறான விண்வெளித் தூக்கியை அமைக்க முடியாது என்று எண்ணப்பட்டது. அதற்குரிய காரணம், ஒரு விண் தூக்கிக்குப் பயன்படுத்தப்படும் கம்பி வடங்கள் அறுந்துவிடுவன என்பது தான். நவீன ஆராய்ச்சிப் படி, கார்பன் நானோகுழாய்கள் என்று அழைக்கப்படும் உருளைவடிவ நானோகட்டமைப்பு உடைய கார்பனின் புறவேற்றுமைத்திரிவுகள் ஊடாக இந்தத் தூக்கியை அமைக்கமுடியும் என்று நம்பப்படுகின்றது. இன்றைய தொழினுட்பத்துடன் ஒரு சில சென்டிமீட்டர் நீளம் உடைய நானோகுழாய்களை மட்டுமே உருவாக்க முடிகின்றது. எதிர்காலத்தில் ஒரு விண் உயர்த்தியை உருவாக்கத் தேவைப்படுகின்ற அளவில் நானோகுழாய்களைத் தயாரிக்கமுடியும் என்று விஞ்ஞானிகளால் எண்ணப்படுகின்றது.[3]
மேற்கோள்கள்
- "What is a Space Elevator?". www.isec.org (ஏப்ரல் 11, 2012).
- Hirschfeld, Bob (சனவரி 31, 2002). "Space Elevator Gets Lift". TechTV. G4 Media, Inc.. மூல முகவரியிலிருந்து சூன் 8, 2005 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் செப்டம்பர் 13, 2007.
- "வாங்கள் விண்வெளி போகலாம்", 12 பெப்ரவரி 2014, பார்த்த நாள் 06 ஒக்டோபர் 2014.